ஸ்ரீரங்கத்தில் பக்தர் மீது தாக்குதல்: கோயில் நடை அடைப்பு!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் பக்தர் மீது கோயில் பாதுகாவலர் தாக்கியதால், பக்தர் சென்னாராவுக்கு மூக்குடைந்து ரத்தம் கொட்டியதால் கோயில் நடை அடைக்கப்பட்டது.
ஸ்ரீரங்கத்தில் பக்தர் மீது தாக்குதல்: கோயில் நடை அடைப்பு!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் பக்தர் மீது கோயில் பாதுகாவலர் தாக்கியதால், பக்தர் சென்னாராவுக்கு மூக்குடைந்து ரத்தம் கொட்டியதால் கோயில் நடை அடைக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் அரங்கநாதருக்கு வைகுண்ட ஏகாதேசி திருவிழாவானது இன்று திருநெடும் தாண்டகம் என்னும் உற்சவத்தின் மூலம் துவங்க உள்ளது.

இந்த துவக்க நாளான இன்று காலையில் அரங்கனை தரிசிக்க வந்த கர்நாடகம் மற்றும் ஆந்திர ஐயப்ப பக்தர்களுக்கும், கோயில் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றி ஏற்பட்ட மோதலால் அடிதடி உருவாகி அங்கு ஐயப்ப பக்தர் சென்னராவ் உள்பட பலர் தாக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சென்னா ராவை தாக்கிய தற்காலிக ஊழியர்களான செல்வம், விக்னேஷ், பரத் குழுவினர் மீது காவல் துறையினரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

தாக்குதலுக்கு ஆளான ஐயப்ப பக்தர்கள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com