வர்தா புயலின்போது நிலைமை 2 நாள்களில் சீரமைக்கப்பட்டது: எஸ்.பி.வேலுமணி

வர்தா புயலின்போது சென்னையில் 6 லட்சம் மரங்கள் சாய்ந்த நிலையில், நிலைமை 2 நாட்களில் சீரமைக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
வர்தா புயலின்போது நிலைமை 2 நாள்களில் சீரமைக்கப்பட்டது: எஸ்.பி.வேலுமணி

வர்தா புயலின்போது சென்னையில் 6 லட்சம் மரங்கள் சாய்ந்த நிலையில், நிலைமை 2 நாட்களில் சீரமைக்கப்பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

மிக்ஜம் புயலினால் பெய்த கனமழையால் தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. புயலினால் பாதித்த இடங்களில் நிலைமையை சரிசெய்து, புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், மிக்ஜம் புயல், மழை வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு மிகச் சிறப்பாக கையாண்டதாக மத்திய அரசின் குழு ஆய்வுக்கு பிறகு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வர்தா புயலின்போது சென்னையில் 6 லட்சம் மரங்கள் சாய்ந்த நிலையில், நிலைமை 2 நாட்களில் சீரமைக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: கடந்த 2016 ஆம் ஆண்டு வர்தா புயலின்போது  சென்னையில் 6 லட்சம் மரங்கள் சாய்ந்த நிலையில், புயலினால் பாதிக்கப்பட்டப் பகுதிகள் போர்க்கால அடிப்படையில் 2 நாட்களில் சீரமைக்கப்பட்டது. 25 ஆயிரம் மின்கம்பங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் செயலிழந்தபோதிலும் இரண்டே நாள்களில் சீரமைக்கப்பட்டன. சமூக வலைத்தளங்களை முடக்கும் நோக்கில் செயல்பட்டு மின்சாரத்தை திமுக அரசு வழங்கவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com