புதிய கரோனா தொற்றால் மிதமான பாதிப்புதான்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

சிங்கப்பூரில் மற்றும் கேரளத்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய கரோனா பாதிப்பு மிதமான பாதிப்பாகவே இருக்கிறது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
அமைச்சர் மா. சுப்பிரமணியன்
அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சிங்கப்பூரில் மற்றும் கேரளத்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய கரோனா பாதிப்பு மிதமான பாதிப்பாகவே இருக்கிறது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் வேளச்சேரியில் மழைக்கால மருத்துவ முகாமை தொடங்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'கரோனா தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு தமிழகத்தில் 98%-க்கும் அதிகமானோருக்கு 3 தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கரோனாவின் உருமாற்றம் பல வகைகளில் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. 

சிங்கப்பூரில் பலருக்கு உருமாறிய கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் மருத்துவ பல்கலைக்கழகத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, 'இதனால் பாதித்தவர்கள் ஒரு சில நாள்களில் சரியாகிவிடுகிறார்கள். இருமல், சளி மட்டுமே அறிகுறிகளாக உள்ளது' என்று கூறினார்கள்.

கேரளத்தில் நேற்று 280 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அங்குள்ள சுதாரத்துறையினருடனும் பேசி வருகிறோம். இந்த கரோனா பாதிப்பு மிதமான பாதிப்பாகவே இருக்கிறது. 3-4 நாட்களில் சரியாகிவிடுகிறது. 

தமிழகத்தில் தொடர்ந்து இது தொடர்பாக கண்காணித்து வருகிறோம். காய்ச்சல் அதிகம் இருப்பவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மாதிரிகள் பகுப்பாய்வு செய்து எந்தமாதிரியான வகை என்று கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளே போதுமானதாக இருக்கிறது. 

தமிழகத்தில் 3 ஆயிரம் இடங்களில் 8- வது மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 7 வாரங்களில் இதுவரை 16,516 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன. அனைத்து முகாம்களில் 9 மாதம் முதல் 15 வயதுடைய சிறார்களுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவ முகாம்கள் மூலம் 7.83 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com