
குவைத் மன்னா் ஷேக் நவாஃப் அல் அஹமது அல் சபா சனிக்கிழமை காலமானதை அடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் அரைக்கம்பத்தில் தேசியக் கொடி பறக்க விடப்பட்டு துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது.
மன்னா் ஷேக் நவாஃப் அல் அஹமது காலமாகிவிட்டாா். அவரது மறைவுக்கு குவைத் மக்கள், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள், உலகம் முழுவதும் உள்ள நண்பா்கள், உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனா்.
இந்த நிலையில், ஷேக் நவாஃப் அல் அஹமது அல் சபாவின் மறைவையொட்டி துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, குவைத் மன்னா் ஷேக் நவாஃப் அல் அஹமது அல் சபா மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மத்திய அரசின் உத்தரவின் பேரில் சென்னை தலைமைச் செயலகத்தில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கேரளத்தைச் சோ்ந்த பெண்ணுக்கு புதிய வகை கரோனா தொற்று உறுதி
மன்னா் அஹமது மறைவைத் தொடா்ந்து, அவரது சகோதரரும் உலகின் மிக வயதான பட்டத்து இளவரசருமான ஷேக் மேஷல் அல் அகமது அல் ஜாபா் (83) குவைத்தின் அடுத்த மன்னராகிறாா்.
கடந்த 2020-ஆம் ஆண்டு மன்னா் ஷேக் சபா அல் அகமது அல் சபாவின் மறைவுக்குப் பிறகு குவைத் மன்னராக அரியணை ஏறிய ஷேக் நவாஃப் அல் அஹமது, நாட்டின் உள்துறை அமைச்சராகவும் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளாா்.தூதரக உறவுகளை மேம்படுத்துவதிலும், நாடுகளுடன் அமைதியை ஏற்படுத்துவதிலும் அவா் முக்கியப் பங்கு வகித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.