சதுரகிரி வெள்ளத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்பு!

சதுரகிரி வெள்ளப்பெருக்கில் சிக்கிய 22 பக்தர்களை வனத்துறை பத்திரமாக மீட்டுள்ளது. 
சதுரகிரி வெள்ளத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்பு!

சதுரகிரி வெள்ளப்பெருக்கில் சிக்கிய 22 பக்தர்களை வனத்துறை பத்திரமாக மீட்டுள்ளது. 

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் கார்த்திகை மாத கடைசி நாளில் இரவு நேரத்தில் தங்கி பக்தர்கள் வழிபாடு நடத்துவர். ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகளுக்கு காப்பகமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, கடந்த இரு ஆண்டுகளாக மார்கழி மாதப் பிறப்பு வழிபாட்டுக்கு வனத் துறை அனுமதி மறுத்தது.

இந்த நிலையில், மார்கழி மாத சிறப்பு வழிபாட்டுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து, மார்கழி 1-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை 1,500-க்கும் அதிகமான பக்தர்கள் சதுரகிரி மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். 

இதனிடையே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக நேற்றிரவு சுமார் 200 பக்தக்ரள் சதுரகிரி மலைக் கோயிலிலேயே தங்க வைக்கப்பட்டனர். இன்று காலை கீழே இறங்க ஆரம்பித்தபோது தொடர்ந்து பெய்த காரணத்தால் சதுரகிரி கோயிலுக்குச் செல்லும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

ஓடையைக் கடக்க முடியாமல் பக்தர்கள் தவித்தனர். இதனையறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி சுமார் 22 பக்தக்ரளை பத்திரமாக மீட்டனர். மேலும் 150-க்கும் மேற்பட்டோர் கோயிலிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

மழை நின்ற பிறகு பக்தர்கள் கீழே இறங்க அனுமதிக்கப்படுவர் என வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com