மீட்புப் பணிகள்: முப்படைகளிடம் உதவி கேட்பு!

திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முப்படைகளிடம் உதவி கோரப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணிகள்: முப்படைகளிடம் உதவி கேட்பு!

சென்னை: திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முப்படைகளிடம் உதவி கோரப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அதிகனமழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

வரலாறு காணாத கனமழையால் ரயில், பேருந்து சேவைகள் முடங்கியுள்ளது. வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் இருந்து மக்களை மீட்கும் பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், மீட்புப் பணிகளை விரைவுப் படுத்தி பாதிக்கப்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பொருள்களை அளிப்பதற்காக ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையின் உதவிகளை கேட்டுள்ளதாக தலைமை செயலர் தெரிவித்துள்ளார்.

சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து முதல்கட்டமாக ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொருள்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com