தொங்கும் தண்டவாளம்: திருச்செந்தூர் - சென்னை ரயில் நடுவழியில் நிறுத்தம்

திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த விரைவு ரயில், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது.
தொங்கும் தண்டவாளம்: திருச்செந்தூர் - சென்னை ரயில் நடுவழியில் நிறுத்தம்

ஸ்ரீவைகுண்டம்: திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த விரைவு ரயில், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் அடுத்து தாதன்குளம் அருகே கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு, மண் அரிப்பால் தண்டவாளத்தின் கீழ் இருந்த தரைப்பகுதி முழுமையாக அடித்துச் செல்லப்பட்டுவிட்ட நிலையில், தண்டவாளம் எந்த பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் நேற்று இரவு ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில்  நிறுத்தப்பட்டுள்ளது. அந்த ரயிலில் இருந்த நூறுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டு பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டனர். மற்றவர்களை மீட்கும் பணி நடப்பதற்குள் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தை தொடர்புகொள்ளும் சாலைகள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கிவிட்டதால், ஏராளமான பயணிகள் ரயிலுக்குள்ளேயே உணவின்றி தவித்துவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அருகில் உள்ள சிறிய கடைகளிலிருந்து பயணிகள் குடிநீர் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொள்வதாகவும் ரயில் நிலையம், முற்றிலும் வெள்ளத்தில் சிக்கியிருப்பதால் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை இருப்பதாக பயணிகளும் கருதுகிறார்கள்.

நெல்லை மாவட்டம் தாமிரபரணியில் 1 லட்சம் கன அடிக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

நெல்லை சந்திப்பு பகுதியில் தற்பொழுது புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இந்த பகுதியில் சுற்றியுள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட கடைகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தண்ணீர் வேகம் அதிகரித்து வருவதால் இந்தப் பகுதியை யாரும் நெருங்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டு உள்ளது பல கோடிகள் செலவு செய்து கட்டப்பட்ட பேருந்து நிலையத்தின் நிலை மோசமாக உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com