47 ஆவது சென்னை புத்தகக் காட்சி ஜன. 3ஆம் தேதிமுதல் தொடங்குகிறது.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜன.3ம் தேதி மாலை 4.30 மணியளவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ளார். ஜன. 21 வரை புத்தகக் காட்சி நடைபெற உள்ளது.
துவக்கவிழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொள்ளவுள்ளார்.
புத்தகக் காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். மொத்தம் 19 நாட்கள் புத்தகக் காட்சி நடைபெறுகிறது.
ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரைவீச்சுக்கள் நடைபெற உள்ளது .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.