நெல்லையில் 1வது முதல் 8ஆம் வகுப்பு வரை நாளை (டிச.22) விடுமுறை!

நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு காரணமாக 1வது முதல் 8ஆம் வகுப்புகளுக்கு மட்டும் நாளை (டிசம்பர் 22) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு காரணமாக 1வது முதல் 8ஆம் வகுப்புகளுக்கு மட்டும் நாளை (டிசம்பர் 22) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புகளுக்கு நாளை பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்ற நிலையில், வெள்ளம் வடியாத மற்றும் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறும் 9 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ளம் குடியிருப்புகள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்து கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. 

மழை நின்ற நிலையில் தாழ்வான இடங்களில் தேங்கிய வெள்ளம் படிப்படியாக வடிந்து வருகிறது. நெல்லை ரயில் நிலையத்தில் தேங்கிய நீர் வடிந்து வருவதால் அங்கிருந்து மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் கனமழையால் புத்தகத்தை இழந்த மாணவர்கள் விவரங்களை சேகரிக்கும் பணி நாளை முதல் தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com