யாரிடம் எப்படி பேச வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்துள்ளார்கள்: நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி பதில்!

யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள் என்று மத்திய நிதியமைச்சர்
உதயநிதி ஸ்டாலின் (கோப்புப் படம்)
உதயநிதி ஸ்டாலின் (கோப்புப் படம்)

சென்னை: யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். 

தமிழகத்துக்கான மத்திய அரசின் வெள்ள நிவாரண நிதி குறித்த அமைச்சர் உதயநிதி அண்மையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அவர்களது பாஷை எப்போதும் அப்படிதான் இருக்கும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அவருக்கு உரிய மரியாதையை கொடுத்துதானே வருகிறோம். அரசியலில் முன்னுக்கும் வரவேண்டும் என நினைக்கும் உதயநிதிக்கு நல்லதல்ல என நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

இதற்கு உதயநிதி ஸ்டாலின் தற்போது பதிலளித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: 

யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள்.

சிலரிடம் அண்ணாவைப் போல -  சிலரிடம் கலைஞரைப் போல – சிலரிடம் கழகத்தலைவரைப் போல பேசுகிறோம். எனினும், குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது.

வெள்ள பாதிப்புக்காக கழக அரசு நிவாரண நிதி கேட்டால்,  "நாங்கள் என்ன ஏ.டி.எம்-ஆ" என மத்திய அமைச்சர் ஒருவர் கூறியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ‘அவர் அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம்" என்று கூறினேன்.

என் பேச்சில் மரியாதை சற்று குறைவாக இருந்ததாக அப்போது சிலர் வருத்தப்பட்டார்கள். அடுத்த நாளே, மத்திய அமைச்சருடைய அப்பா வீட்டு பணத்தை கேட்கவில்லை என்று அவர்கள் கோரியபடியே மிகுந்த ‘மரியாதையுடன்’ கேட்டுக்கொண்டேன். ஆனாலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ‘பாஷை’ குறித்து இன்று பாடமெடுத்துள்ளார்கள்.

மீண்டும் சொல்கிறேன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை நாம் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து தமிழ்நாடு அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியைத்தான் கேட்கிறோம்.

வழக்கமாக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் மாநில பேரிடர் நிவாரண நிதியை தந்து விட்டு, ஏதோ மத்திய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தந்தது போல அடித்துப் பேச வேண்டாம். 

நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும்  ‘மரியாதை’ தருவதற்கு தயாராகவே இருக்கிறோம் – தமிழ்நாட்டு மக்கள் மீது கொஞ்சமாவது ‘அக்கறை’ வைத்து நிதியைத் தாருங்கள் மரியாதைக்குரிய மத்திய நிதி அமைச்சர் அவர்களே! என உதயநிதி கேட்டுகொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com