இன்று வரும் பாடல்களை காது கொடுத்து கேட்கவே முடியவில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

இன்று வரும் பாடல்களை காது கொடுத்து கேட்கவே முடியவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
இன்று வரும் பாடல்களை காது கொடுத்து கேட்கவே முடியவில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

இன்று வரும் பாடல்களை காது கொடுத்து கேட்கவே முடியவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36 வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்தும்,  மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். மேலும் அதிமுக சார்பில் எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது .

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதே ஒரே இலக்கு , 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் , மழைநீர் வடிகால் திட்டத்தில் விஞ்ஞானமுறையில் ஊழல் செய்த திமுகவிற்கு பாடம் புகட்டுவோம், துரோகத்தால் அதிமுகவை வீழ்த்த முடியாது என்பன உள்ளிட்ட உறுதிமொழிகளை அதிமுகவினர் ஏற்றனர். 

திரைப்படத்தில் பல நல்ல கருத்தை கொண்டுவந்தவர் எம்ஜிஆர். இன்று வரும் பாடல்களை காது கொடுத்து கேட்கவே முடியவில்லை . ஆனால் எம்ஜிஆரின் தத்துவப் பாடல்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றன. சமூகம் எக்கேடு கெட்டால் என்ன என்று இன்றைய நடிகர்கள் இருக்கின்றனர். மழைநீர் வடிகால் பணிக்காக 4 ஆயிரம் கோடி செலவு செய்தது குறித்து முதல்வர், அமைச்சர்கள் மாறி மாறி கருத்து தெரிவிக்கின்றனர்.

எனவே அதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அதன் மூலம் எவ்வளவு செலவாகியுள்ளது, எதற்கெல்லாம் செலவானது என மக்களுக்கு தெரியவரும். ஆனால் அதை வெளியிட அரசு பயப்படுகிறது. 

தென் மாவட்டங்களில் ஏரி , குளங்களை முறையாக தூர்வாரி இருந்தால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்காது. நாங்கள் சொன்ன கருத்தைதான் நிர்மலா சீதாராமனும் சொல்லி இருக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com