
சென்னை: சென்னை வளசகவாக்கத்தில் பெங்களூரு தொழிலதிபர் தவறவிட்ட ரூ.15.90 லட்சம் பணத்தை ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்து கொடுத்த சிஎம்பிடி போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பெங்களூருவைச் சேர்ந்தவர் தொழிலதிபர் விஸ்வநாதன். இவர் தனது அக்கா மகனின் வெளிநாட்டு படிப்புக்காக நண்பரிடம் வாங்கிய ரூ.15.90 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வளசரவாக்கத்தில் உள்ள அக்கா வீட்டிற்கு ஆட்டோவில் வந்துள்ளார். அப்போது ஆட்டோவின் பின்புறம் பணப்பை வைத்துள்ளார். இதனை மறந்துவிட்டு ஆட்டோவில் இருந்து இறங்கி வீட்டுக்குச் சென்றுள்ளார்.
பின்னர், ஆட்டோவின் பின்புறம் பணப்பை வைத்தது நினைவுக்கு வரவே சிஎம்பிடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | தமிழகத்தில் 4 பேருக்கு புதிய வகை கரோனா
இதையடுத்து, ஆட்டோவில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர், சிசிடிவி உதவியுடன் ஒரு மணி நேரத்தில் ஆட்டோவை கண்டுபிடித்த சிஎம்பிடி போலீசார், ஆட்டோவின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த பணத்தை மீட்டனர்.
பின்னர் பணத்தை நள்ளிரவிலேயே தொழிலதிபர் விஸ்வநாதனிடம் காவல் ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் ஒப்படைத்தனர்.
தொழிலதிபர் ஆட்டோவில் தவறவிட்ட ரூ.15.90 லட்சம் பணத்தை உரிய நேரத்தில் மீட்டு கொடுத்த சிஎம்பிடி போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஆட்டோவின் பின்புறம் பணப்பை இருக்கும் விவரம் ஓட்டுநருக்கு தெரியாது என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.