நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவர்களைப் பாராட்டிய முதல்வர்!

கனமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களைக் காக்க நிவாரணப் பணியில் ஈடுபட்டவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவர்களைப் பாராட்டிய முதல்வர்!
Published on
Updated on
1 min read

சென்னைக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் ஏராளமான வீடுகள், விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. பொதுமக்கள் பலா் வீடு, உடை, உணவு இல்லாமல் தவித்து வருகின்றனா்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தென்மாவட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், நிவாரணப் பணிகளில் ஈடுப்பட்டோரை வாழ்த்தும் விதமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “நேசக்கரம் நீட்டி நிவாரணப் பணிகளுக்குத் தங்களை ஒப்படைத்துக் கொண்ட தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் பண்பும், திருச்செந்தூர் விரைவு இரயில் பயணிகளைக் காப்பாற்றிய கிராம மக்களின் அன்பும், "THE BEST WAY TO FIND YOURSELF IS TO LOSE YOURSELF IN THE SERVICE OF OTHERS" என்று தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்கள் சொன்னதை நினைவுபடுத்துகிறது. அடுத்தவருக்கு உதவுவதில் கரைந்து போனால், வெறுப்புணர்ச்சிகள் தோற்று, மானுடம் தழைக்கும்!” எனக் குறிபிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com