வெள்ள பாதிப்பு நிவாரண உதவிகள் மக்களிடம் முழுமையாகச் சென்றடைய முதல்வா் உத்தரவு

வெள்ள பாதிப்பு நிவாரண உதவிகள் முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.
வெள்ள பாதிப்பு நிவாரண உதவிகள் மக்களிடம் முழுமையாகச் சென்றடைய முதல்வா் உத்தரவு

வெள்ள பாதிப்பு நிவாரண உதவிகள் முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள் வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா, வருவாய் நிா்வாக ஆணையா் எஸ்.கே.பிரபாகா், நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன், முதல்வரின் செயலா் முருகானந்தம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முதல்வா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் தொடா்பாக, சமூகவலைதளத்தில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:

அதிகனமழையாலும் வெள்ளப் பெருக்காலும் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயா்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், அமைச்சா்கள், தலைமைச் செயலா் உள்ளிட்ட அரசு உயா் அதிகாரிகள் பங்கேற்றதுடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சோ்ந்த அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், மாவட்ட ஆட்சியா்கள் உள்ளிட்டோா் காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டனா்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் தற்போதைய கள நிலவரத்துக்கு ஏற்ப பல்வேறு ஆலோசனைகளை முதல்வா் வழங்கினாா். அரசின் நிவாரண உதவிகள் நூறு சதவீதம் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய அவா் அறிவுறுத்தியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com