நடராஜர் கோயிலில் கோடி அர்ச்சனை தொடக்கம்: பிப்.22-ல் அதிருத்ர மகாயாகம்,மகாபிஷேகம்!

நடராஜர் கோயிலில் உலக நன்மை கருதி பொதுதீட்சிதர்களால் கோடி அர்ச்சனை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
நடராஜர் கோயிலில் கோடி அர்ச்சனை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
நடராஜர் கோயிலில் கோடி அர்ச்சனை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் உலக நன்மை கருதி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாளுக்கும், ஸ்ரீமந் நடராஜ மூர்த்திக்கும் கோடி அர்ச்சனை, அதிருத்ர மஹா யாகம், லட்சுமி ஹோமம், மஹாபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நடராஜர் கோயிலில் கோடி அர்ச்சனை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கோடி அர்ச்சனை ஆரம்பம் : நடராஜர் கோயிலில் உலக நன்மை கருதி பொதுதீட்சிதர்களால் கோடி அர்ச்சனை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. கோயில் பொதுதீட்சிதர்களின் கமிட்டி செயலாளர் டிஎஸ்.சிவராமதீட்சிதர் தொடங்கி வைத்தார். 

ஒரு நாளின், காலை வேளையில் ஒரு முறை லட்சார்ச்சனையும், மாலை வேளையில் ஒரு முறை லட்சார்ச்சனையும் செய்தால், நாள் ஒன்றுக்கு  இரண்டு லட்சார்சனைகள் அமையும். இதனையே, தொடர்ந்து 50 நாள்களுக்குச்  செய்தால் (50 x 2,00,000 = 1,00,00,000) அது கோடி அர்ச்சனை என்ற கணக்கில் செய்யப்படும் மாபெரும் வைபவமாக அமையும்.

அதிருத்ர ஜபம்: 2024 பிப்.8 ஆம் தேதி வியாழக்கிழமை முதல் பிப்.18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை  நாள்தோறும் காலை 8 மணியளவில், 121 தீட்திர்களால் பத்து நாள்களில்  14,641 முறை ஸ்ரீ ருத்ர ஜப பாராயணம் (அதிருத்ர ஜபம்) நடைபெறுகிறது.

அதிருத்ர மஹா யாகம்: யஜுர் வேதத்தின் மையப் பகுதியானதும், நமசிவாய எனும் ஐந்தெழுந்து மந்திரத்தை தன்னுள் கொண்டதும், முழுவதும் சிவபெருமானையே போற்றுவதும் ஆகிய ஸ்ரீ ருத்ர மந்திரம் அளப்பரிய சக்தி கொண்டது. பரமேஸ்வரரின் பேரருளைப் பெற்றுத் தரக்கூடியது. மங்களங்களை வழங்கக் கூடியது. அதிருத்ர மஹா யாகம் என்பது   ஸ்ரீ ருத்ரத்தினை 14641 முறை சொல்லப்பட்டு, அதில் பத்தில் ஒரு பங்கு ஹோமம் செய்யப்படுவது ஆகும்.

மகாபிஷேகம்:  உலக நன்மை கருதி பிப்.22-ஆம் தேதி வியாழக்கிழமை அதிருத்ர மஹாயாகம், லட்ச ஹோமும், கோயில் கனகசபையில் சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு மாசி மாத மஹாபிஷேகமும் விமரிசையாக நடைபெறவுள்ளது. 

மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளும் சிதம்பரம்  நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களால் நடத்தப்படவுள்ளது. 

லட்ச ஹோமம் என்பது ஒரே நேரத்தில் நூற்று எட்டு  தீட்சிதர்கள், ஒன்பது யாக குண்டங்கள் வாயிலாக  நடேச ஸஹஸ்ரநாமாவளிகளை ஹோமம் செய்வது லட்ச ஹோமம் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com