இந்த வாரம் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: வாரப் பலன்கள்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (டிச.29 - ஜன.4) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். 
இந்த வாரம் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: வாரப் பலன்கள்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (டிச.29 - ஜன.4) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

நேர்வழியில் சிந்தித்து செயலாற்றுவீர்கள். நண்பர்களால் நல்ல அனுபவங்களைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை ஏற்றமாகவே இருக்கும். பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடும்.

உத்தியோகஸ்தர்கள் சில பிரச்னைகளைச் சந்திப்பீர்கள். வியாபாரிகள் வியாபார முறைகளில் மாற்றம் செய்வீர்கள். விவசாயிகள் புதிய பயிர்களை பயிரிடுவீர்கள்.

அரசியல்வாதிகள் கவனமாக இருக்கவும். கலைத் துறையினர் நிலையான வருவாய் பெறத் திட்டமிடுவீர்கள். பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மாணவர்கள் பிறரிடம் உதவிகளைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

உங்கள் வேலைகளைத் தடையில்லாமல் செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகளில் லாபம் பெறுவீர்கள். சுப காரிய விஷயங்களில் சிக்கல்களைத் தீர்ப்பீர்கள். சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு உதவிகள் கிடைக்கும். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் உஷாராக இருக்கவும்.  கலைத் துறையினர் கவனமாக செயல்படவும். பெண்கள் சுப நிகழ்ச்சிகள் நிகழக் காண்பீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

தொழிலில் புதிய அணுகுமுறைகளைக் கையாள்வீர்கள். தன்னம்பிக்கையுடன் திட்டங்களைத் தீட்டுவீர்கள்.  புதிய வாய்ப்புகள் தேடி வரும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பிணக்குகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வியாபாரிகள் நல்ல முறையில் வியாபாரத்தை நடத்துவீர்கள். விவசாயிகள் லாபம் அடைவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு புதிய தொண்டர்கள் கிடைப்பார்கள். கலைத் துறையினரின் புகழ் உயரும். பெண்கள் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். மாணவர்கள் உழைப்புக்கேற்ற பலன் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

தொழிலில் புதிய இலக்குகளை எட்டுவீர்கள். உடல் ஆரோக்கியம், மன வளம் சிறக்கும். குடும்பத்தில் நிம்மதியான போக்கை நிலைநாட்டுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களின் நன்னடத்தையை பிறர் பாராட்டுவார்கள். வியாபாரிகள் விழிப்புணர்வோடு இருந்து புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். விவசாயிகள் காய்கறி, பழங்களைப் பயிரிடுவீர்கள்.  

அரசியல்வாதிகள் சிறிது மனக் குழப்பம் அடைவீர்கள். கலைத் துறையினர் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பெண்கள் உறவினர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். மாணவர்களின் கல்வி மேம்படும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

தேவையற்ற விஷயங்களை மனதிலிருந்து தூக்கி எறிவீர்கள். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.  அரசு உதவிகள் கிடைக்கும். உங்களுக்குக் கீழ்பணியாற்றுவோர் உதவிகளைச் செய்வார்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் விறுவிறுப்பாகப் பணியாற்றுவீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். விவசாயிகள் பிறருக்கு உதவுவீர்கள்.  

அரசியல்வாதிகள் மேலிடத்தின் அன்பைப் பெறுவீர்கள். கலைத் துறையினர் நேர்த்தியாகப் பணியாற்றுவீர்கள். பெண்கள் பொருளாதாரத்தில் உயர்வைக் காண்பீர்கள். மாணவர்கள் செயல்களில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

அனைத்துக் காரியங்களிலும் யோசித்து இறங்குவீர்கள். வெளியூர் பயணங்களில் புதிய அனுபவம் கிடைக்கும்.  கடன் வசூலாகும். 

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல்}வாங்கலில் லாபம் அடைவீர்கள்.

விவசாயிகள் சாதகமான திருப்பங்களைக் காண்பீர்கள். அரசியல்வாதிகள் புதிய பயணம் மேற்கொள்வீர்கள். கலைத் துறையினர் யோசித்து செயல்படுவீர்கள்.

பெண்கள் பெரியோரை மதித்து நடப்பீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

தொழிலில் உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள். உங்களை பிறர் புரிந்துகொள்வார்கள். பிறருக்கு பண உதவிகளைச் செய்வீர்கள். எதிர்ப்புகள் மறையும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் பாராட்டப்படுவார்கள்.

வியாபாரிகள் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். விவசாயிகள் பூச்சித் தொல்லைகளைச் சமாளித்துவிடுவீர்கள். அரசியல்வாதிகள் எவரையும் பகைத்துகொள்ள வேண்டாம்.

கலைத் துறையினர் எதிர்பார்த்த பண உதவிகளைப் பெறுவீர்கள். பெண்கள் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். மாணவர்கள் பிறர் பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

சமூகத்தில் உயர்ந்தவர்களைச் சந்திப்பீர்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரச் சிக்கல்கள் குறையும். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் கருத்து வேறுபாடுகளை மறப்பீர்கள். வியாபாரிகள் புதிய தொழில்களைத் தொடங்கலாம். விவசாயிகள் கடன்களை அடைப்பீர்கள்.

அரசியல்வாதிகள் பிறரிடம் கவனமாகப் பழகவும். கலைத் துறையினர் பிறரிடம் ஒற்றுமையாக இருப்பீர்கள். பெண்கள் சுற்றுலா சென்று வருவீர்கள். மாணவர்களுக்கு உடனிருப்போர் உறுதுணையாக இருப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

தொழிலில் மாற்றங்களைச் செய்வீர்கள். பணவரவு கூடும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள்.  மழலை பாக்கியம் உண்டாகும்.  
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். 

வியாபாரிகள் தனித்தே முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். விவசாயிகள் கால்நடை பராமரிப்புக்கு செலவு செய்ய நேரிடும்.

அரசியல்வாதிகள் தீர ஆலோசித்து செயல்படவும். கலைத்  துறையினர் நன்கு உழைப்பீர்கள். பெண்களுக்கு ஆன்மிக ஈடுபாட்டால் மனம் தூய்மை அடையும். மாணவர்கள் மனதை ஒருநிலைப்படுத்தவும்.

சந்திராஷ்டமம் - டிச. 29, 30.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

சாதுர்யமாகப் பேசி காரியங்களைச் சாதிப்பீர்கள்.  மனதுக்குப் பிடித்தமான பணிகளில் ஈடுபடுவீர்கள்.  

மதிப்பும் மரியாதையும் உயரும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வுக்கு முயற்சி செய்வீர்கள். வியாபாரிகள் போட்டிகளை சமாளிப்பீர்கள்.

விவசாயிகளுக்கு பொருளாதாரம் சீரடையும். அரசியல்வாதிகள் தொண்டர்
களின் அன்பைப் பெறுவீர்கள். கலைத் துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.  பெண்கள் குடும்பத்தினருடன் சகஜமாகப் பழகுவீர்கள். 

மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையைக் கேட்பீர்கள்.
சந்திராஷ்டமம் - டிச. 31, ஜன. 1, 2.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

சிறிது தாமதமானாலும் பண வரவு உண்டு. குடும்பப் பிரச்னைகள் தீரும். குழந்தைகள் உங்கள் சொல் கேட்பார்கள். தொழிலில் புதிய முயற்சிகளைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர் களுக்கு அலுவலகத்தில் சிறப்பிடம் உண்டு. 

வியாபாரிகள் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் கட்சித் தலைமையை அனுசரித்து நடப்பீர்கள்.

கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் -  ஜன. 3, 4.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

உங்கள் திறமைகள் வெளிப்படும். உடல் நலம், மனவளம் மேம்படும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டு. உதவிகள் கேட்காமலேயே கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு உபரி வருவாய் கிடைக்கும். வியாபாரிகளுக்கு போட்டிகள் குறையும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் உண்டு.

அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.  கலைத் துறையினர் சக கலைஞர்களுடன் நட்புறவுடன் இருப்பீர்கள்.  

பெண்களுக்கு கணவருடனான  ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் சோம்பேறித்தனத்தை  விட்டொழித்து அதிகாலையில் எழுந்து படிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com