அண்ணா நினைவு நாள்: மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

அறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி மெரினாவிலுள்ள அவரின் நினைவிடம் நோக்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 
மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள்
மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள்

அறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி மெரினாவிலுள்ள அவரின் நினைவிடம் நோக்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

சென்னை வாலாஜா சாலையில் நடைபெற்று வரும் இந்த பேரணியில், துரைமுருகன், டி.ஆர். பாலு, பொன்முடி, மா.சுப்பிரமணியன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர். 

தமிழகத்தில் அறிஞர் அண்ணாவின் 54வது நினைவுநாள் அனுசரிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி சென்னை மெரினாவிலுள்ள அண்ணா நினைவிடம் நோக்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெற்று வருகிறது. 

அண்ணா நினைவிடம் சென்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அவருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தவுள்ளார். இதனையொட்டி அண்ணா நினைவிடம் முழுக்க அலங்கரிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com