தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

வாணி ஜெயராம் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் மரியாதை

சென்னை, நுங்கம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள திரையிசைப் பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் மரியாதை செலுத்தினார்.

News image
Updated On :4 பிப்ரவரி 2023, 3:21 pm

சென்னை, நுங்கம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள திரையிசைப் பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் மரியாதை செலுத்தினார்.

திரையிசைப் பாடகி வாணி ஜெயராம் தனியாக தனது வீட்டில் வசித்து வந்த நிலையில், அவரது வீட்டுப் பணியாளர் மலர்க்கொடி இன்று காலை 10.30 மணியளவில் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டியும் திறக்காததால் காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள வாணி ஜெயராமின் சகோதரிக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, அவர் எடுத்து வந்த வீட்டு சாவி மூலம் கதவு திறக்கப்பட்டு, வீட்டுக்குள் சென்றனர். வீட்டில், தலையில் அடிபட்ட நிலையில், ரத்தக் காயங்களுடன் வாணி ஜெயராம் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

அங்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து வாணி ஜெயராம் வீட்டில் தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். உடற்கூறாய்வு நிறைவடைந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் இருந்து வாணி ஜெயராமின் உடல் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவரது உடல் நாளை சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.