
சென்னையில் உடலநலக் குறைவால் காலமான திரைப்பட இயக்குநரும், நடிகரும், தனது கல்லூரித் தோழருமான டி.பி. கஜேந்திரன் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பிரபல இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் உடலநலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார்.
அவரது மறைவுக்கு திரையுலக பிரமுகர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தியும், இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | பாடகி வாணி ஜெயராமன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி!
இந்நிலையில், திரைப்பட இயக்குநரும், நடிகரும், தனது கல்லூரித் தோழருமான டி.பி. கஜேந்திரன் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
உடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.