தமிழ்நாட்டைப் பாராட்டிய ஆதித்ய தாக்கரே!

காலநிலை மாற்றத்திற்கு எதிராக தமிழக அரசு குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது என்று மகாராஷ்டிர காலநிலை மாற்றத் துறையின் முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே தெரிவித்தார்.
தமிழ்நாட்டைப் பாராட்டிய ஆதித்ய தாக்கரே!

காலநிலை மாற்றத்திற்கு எதிராக தமிழக அரசு குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது என்று மகாராஷ்டிர காலநிலை மாற்றத் துறையின் முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்தும் கல்விச் சிந்தனை அரங்கின் இரண்டாம் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு காலநிலை மாற்ற குறித்து மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

நாம் புவியைப் பாதுகாக்க வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் அது உண்மையில்லை. நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். மகாராஷ்டிரத்தில் காலநிலை மாற்றத்திற்கு எதிரான வேலைகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தோம். தமிழ்நாடு குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது. காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தமிழ்நாடு காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சிறப்பாக செய்து வருகிறது.

நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தைக் குறித்து பேசத் தொடங்குவது மிகமிக கடினமாக ஒன்றாக இருக்கிறது. நமது வாழ்க்கையின் முக்கியமான ஒரு இடமாக காலநிலை மாற்றம் இருக்கிறது. நீங்கள் மும்பைக்கு வந்தால் காற்று மாசுபாடு குறித்து பேசுவதைக் காணலாம். ஆனால் அரசு காற்று சுத்திகரிப்பானை அமைப்பதாகக் கூறுகிறது. நாம் காற்று சுத்திகரிப்பானை அமைக்க வேண்டியதில்லை. காற்று மாசுபாட்டிற்கான காரணத்தை நாம் ஆராய வேண்டும். அதற்கான தீர்வை கண்டறிய வேண்டிய இடத்தில் இருக்கிறோம். 

நகர்ப்புறங்களில் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. ஒரு காலத்தில் விளையாடுவதற்கு மைதானம் இருந்தது. ஆனால் இன்றைக்கு அவை கட்டடங்களாக மாறியுள்ளன.  25 ஆண்டுகளுக்கு முன்பு செய்ததையே பேசுகிறோம். ஆனால் யாரும் எதிர்காலத்தைக் குறித்து பேசுவதில்லை. கடந்த காலத்தின் பெருமைகள் அவசியம். அதைவிட எதிர்காலத்தைக் காக்கக் கூடிய காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகள் முக்கியம். 

அடுத்த தலைமுறையை காலநிலை மாற்றத்திற்கு எதிரான பயணத்திற்கு தயார்படுத்துவது அனைவரின் பணி. நமக்கு அடிப்படை கட்டமைப்பு அவசியம். அதேசமயம் மக்களுக்கு வளமான வாழ்க்கையை உறுதிப்படுத்த இயற்கையை பாதுகாப்பது அதைவிட முக்கியமான ஒன்றாக இருக்கிறது. விவசாயி பாதிப்பு ஏற்படுவதால் நாம் மானியம் வழங்குகிறோம். இயற்கையை பாழாக்குவதால் விவசாயிகள் பாதிப்பை எதிர்கொள்கின்றனர். இத்தகைய சூழலை தவிர்க்க காலநிலை மாற்ற சிக்கலை நாம் கவனிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com