தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் கல்விச் சிந்தனை அரங்குக்கு பிரதமர் வாழ்த்து!

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சாா்பில் நடைபெற்று வரும் கல்விச் சிந்தனை அரங்குக்கு (திங்க்எடு) பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் கல்விச் சிந்தனை அரங்குக்கு பிரதமர் வாழ்த்து!

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சாா்பில் நடைபெற்று வரும் கல்விச் சிந்தனை அரங்குக்கு (திங்க்எடு) பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் நேற்று காலை கல்விச் சிந்தனை அரங்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த அரங்கில், மத்திய, மாநில அமைச்சா்கள், கல்வியாளா்கள், அரசியல் தலைவர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்று கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட தலைப்புகளில் சிறப்புரையாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கல்விச் சிந்தனை அரங்குக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில்:

நடப்பாண்டு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்தும் கல்வி சிந்தனை அரங்கின் புதிய இந்தியா: உலகின் எழுச்சி என்ற தலைப்பிலான அமர்வுகள் இந்தியாவின் ஆற்றல் மற்றும் நிலையை பிரதிபலிக்கின்றன.

நாட்டின் ஒருமித்த வளர்ச்சிக்காக கல்வியின் முக்கியத்துவம் குறித்த செயல் ஊக்கம் மிக்க எண்ணங்களை இந்த நிகழ்வில் பங்கேற்கும் கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், சமூக அறிவியலாளர்கள், ஆன்மிகத் தலைவர்கள், மாணவர்கள் பகிர்ந்து கொள்வார்கள் என்பதை உறுதியாக நம்புகிறேன்.

சமூகம் மற்றும் தனிமனிதனின் இணக்கமான வளர்ச்சிக்கு கல்வி மிக முக்கியமானது. வாழ்க்கையிலும் சரி, சமூகத்திலும் சரி, அறிவாற்றலுக்கு முக்கியமான இடத்தைக் கொடுக்கும் ஒரு தொடர்ச்சியான பாரம்பரியத்தை உடையது நம்முடையது.

கல்வித் துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்ததால், 21-ம் நூற்றாண்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் எதிர்காலத்துக்கான கல்வியை உருவாக்கும் நடவடிக்கைகளில் நாடி ஈடுபட்டு வருகிறது.

வானியல், விளையாட்டு, தகவல் தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள், மருத்துவம், தொழில்முனைவது உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாறுபட்ட கோணங்களில் நம் திறன்மிக்க இளைஞர்கள் ஜொலிக்கின்றனர். பல்வேறு சவால்களுக்கான தீர்வை உலக நாடுகள் இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்கின்றன. இதுபோன்ற சூழலில் கல்வி அமைப்பின் எண்ணோவோட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

எதிர்காலத்தை எதிர்கொள்ளும் வகையில் இளைஞர்களைத் தயார்படுத்துவதற்காக அவர்களிடத்தில் சமயோஜித சிந்தனையைப் புகுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இதுவே புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான நோக்கம்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் முயற்சியில் நடைபெறும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த கல்விச் சிந்தனை அரங்கு பாராட்டுதலுக்கு உரியது. 11வது ஆண்டு கல்விச் சிந்தனை அரங்கு வெற்றி பெற வாழ்த்துகளும் பாராட்டுகளும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com