அண்ணாமலையுடன் இணைந்து பிரசாரம் செய்வீர்களா? எடப்பாடி பழனிசாமி பதில்

அண்ணாமலையுடன் இணைந்து பிரசாரம் செய்வீர்களா? என்கிற கேள்விக்கு அதிமுக இடைக்காலப் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

அண்ணாமலையுடன் இணைந்து பிரசாரம் செய்வீர்களா? என்கிற கேள்விக்கு அதிமுக இடைக்காலப் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். 

ஈரோட்டில், தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடன் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார். வில்வரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், கருப்பண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு தொகுதியில் அண்ணாமலையுடன் இணைந்து பிரசாரம் செய்வீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு, அண்ணாமலையுடன் இணைந்து பிரச்சாரம் செய்யப்போவதில்லை என அவர் பதிலளித்துள்ளார்.  ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிப்ரவரி 15, 16, 17, 24, 25 ஆகிய 5 நாட்கள் எடப்பாடி பழனிசாமியும், பிப்.19, 20 ஆகிய 2 நாட்கள் பாஜக தலைவர் அண்ணாமலையும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தோ்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக 238 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

வாக்குப் பதிவுக்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இடைத்தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 83 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் அமமுக வேட்பாளா் ஏ.எம்.சிவபிரசாந்த் உள்ளிட்ட 6 போ் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனா். இதையடுத்து, 77 வேட்பாளா்கள் போட்யிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை சுயேச்சை வேட்பாளா்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. 

இதையடுத்து இறுதி வேட்பாளா் பட்டியல் மற்றும் அவா்களுக்கான சின்னங்கள் ஈரோடு கிழக்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சிவகுமாரால், அதிகாரபூா்வமாக சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி ஈவிகேஎஸ் இளங்கோவன்-கை சின்னம் (காங்கிரஸ்), கே.எஸ்.தென்னரசு- இரட்டை இலை (அதிமுக), எஸ்.ஆனந்த்- முரசு (தேமுதிக) ஆகிய 3 போ் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியைச் சோ்ந்தவா்களாக போட்டியிடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com