வக்ஃபு சொத்துக்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது: வக்ஃபு வாரியத் தலைவர் எம். அப்துல்ரஹ்மான்

தமிழகத்தில் வக்ஃபு சொத்துக்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது என வக்ஃபு வாரியத் தலைவர் எம்.அப்துல்ரஹ்மான் தெரிவித்தார்.
சிதம்பரத்தில் ஜமாத் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடக்கி வைத்த தமிழ்நாடு  வக்ஃபு வாரியத் தலைவர் எம்.அப்துல்ரஹ்மான்.
சிதம்பரத்தில் ஜமாத் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடக்கி வைத்த தமிழ்நாடு  வக்ஃபு வாரியத் தலைவர் எம்.அப்துல்ரஹ்மான்.
Published on
Updated on
2 min read

தமிழகத்தில் வக்ஃபு சொத்துக்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது என வக்ஃபு வாரியத் தலைவர் எம். அப்துல்ரஹ்மான் தெரிவித்தார்.

சிதம்பரத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த தமிழ்நாடு வஃக்பூ வாரிய தலைவர் எம். அப்துல்ரஹ்மான் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: 

வக்ஃபு சொத்துக்கள் இறைவன் பெயரால் அர்ப்பணிக்கப்பட்டது. இந்த சொத்துக்கள் இரண்டு வகைகளில் கைவிட்டு போகின்றது. ஒன்ற ஆக்கிரமிப்பு, இன்னொன்று  அபகரிப்பு என்று கைவிட்டு போய் உள்ளது. நிலத்தை விற்பவரோ, வாங்குவோரோ சார் பதிவாளர் அலுவலகத்துக்கு போக வேண்டியது இல்லை என்கிற அந்த காலகட்டத்தில். போலியான ஆவணங்களை உருவாக்கி ஒருவரிடம் விற்க, அவர் அடுத்தடுத்தவர்களுக்கு விற்க இப்படியாக தொடர்ந்து கை மாறி இதுவரையிலும் ஐந்துக்கும் மேற்பட்ட கைகள் என்று மாறி சென்றுள்ளது. 

நான் பொறுப்புக்கு வந்தப் பிறகு அரசாங்க நில அளப்பு துறை மூலமாக, பதிவு செய்யப்பட்ட அத்தனை புல எண்களையும், சர்வே எண்களையும் பட்டியலிட்டு அந்தந்த பகுதியில் இருக்க கூடிய சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி, இந்த சர்வே எண்களில் இதுநாள் வரை  என்னென்ன  சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டது, வாங்கப்பட்டது என்றும் கோரியுள்ளோம். 

இனிமேல் எந்த விற்பனையும் வக்ஃபு வாரிய புல எண்களில் ஆவணங்களில் பதிவு செய்யக் கூடாது என என்று தடை வைத்திருக்கிறோம். இதன் மூலம் போலி பத்திரப்  பதிவு செய்வதை இதன் மூலம் தடுத்து இருக்கிறோம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உண்மைதான். சர்வே எண் மாற்றம் செய்திருந்தால் அவர்களுடைய சொத்து என்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு தடையில்லா சான்று வழங்கி வருகிறோம். இது இப்போது நடைமுறையில் இருக்கிறது.

இனிமேல் வக்ஃபு  வாரிய சொத்துக்கள் யாருக்கும் விற்பனை செய்ய முடியாது. தமிழக முதல்வர் இதில் அரசியல் குறிக்கீடு இருக்காது என்பதை அறிவுறுத்தி, மிக துணிச்சலோடு செயல்பட்டு, ஆக்ரிமிக்கப்பட்ட இடங்களையும், அபகரிக்கப்பட்ட இடங்களையும் மீட்டுக் கொண்டு வந்து, பொது மக்களுடைய பயன்பாட்டிற்கு தரவேண்டும்  என தெரிவித்துள்ளார். 

அதன்படி எந்த குறுக்கிடும்  இல்லாமல் நிர்வாகம் சீராக நடந்து வருகிறது.  வக்ஃபு வாரிய நிலங்களை கல்வி நிறுவனங்களாகவும், மருத்துவமனைகளாகவும், பயன்படுத்துவதற்கு முன் வாருங்கள் என்று எல்லா இடங்களிலும் சொல்லி வருகிறோம். வக்ஃபு சொத்துக்களை கண்காணிக்க கூடிய அரசு ஒரு அங்கம் தான். இந்த வஃக்பு சொத்துக்களை பயன்படுத்தி கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், பயிற்சி மையங்கள் இவை எல்லாம் உருவாக்குவதற்கு தனியார், அல்லது குழுவாக சேர்ந்து  செயல்படுவதற்கு முன் வாருங்கள் அதற்கு வகுப்பு வாரியம் துணை நிற்கும் என்றார் எம்.அப்துல்ரஹ்மான். 

முன்னதாக சிதம்பரத்தில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு மற்றும் மேஜர் ஜி.முஸ்தபாகமால் வழங்கிய அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் உயிர்க்காக்கும்  ஆம்புலன்ஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் எம்.அப்துல்ரஹமான் கலந்து கொண்டு ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் ஜமாத் நிர்வாகிகள் ஜாகீர்உசேன், ஹலீம், முகமது ஜியாவுதீன், மூசா, நகரமன்ற உறுப்பினர் தில்லை ஆர்.மக்கீன், தொழிலதிபர் எஸ். ஆர். ராமநாதன், மூத்த மருத்துவர் ஆர். முத்துக்குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com