பிரபாகரன் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சி, நேரில் சென்று பார்த்து வருவேன்: கே.எஸ். அழகிரி

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் எங்கள் வேட்பாளர் இ.வி.கே.எஸ். இளங்கோவனின் வெற்றி நிமிடத்திற்கு நிமிடம் உறுதி செய்யப்பட்டு வருகிறது.
கே.எஸ். அழகிரி (கோப்புப் படம்)
கே.எஸ். அழகிரி (கோப்புப் படம்)

பிரபாகரன் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சி என்றும் அப்படி அவரை நேரில் சென்று பார்த்துவருவேன் எனவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளரை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் எங்கள் வேட்பாளர் இ.வி.கே.எஸ். இளங்கோவனின் வெற்றி நிமிடத்திற்கு நிமிடம் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

வரும் 14, 15, 16 ஆகிய நாட்களில் ஈரோடு தொகுதியில் பிரசாரம் செய்ய இருக்கிறேன். 15-ம் தேதி தினேஷ் குண்டுராவ் பிரச்சாரம் செய்ய உள்ளார். 24, 25 தேதிகளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்ய இருக்கிறார்.

கூட்டணியில் நாங்கள் அடிபணிந்து நடப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்து தவறானது.

அம்பானி, அதானே விவகாரம் குறித்து நாங்கள் போராட்டம் நடத்தி உள்ளோம். ஒரு நிறுவனத்தின் பங்குகள் 10 லட்சம் டாலர் சரிந்து இருக்கிறது என்றால் மத்திய அரசும், பிரதமரும் அது குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.

 பிரதமர் மோடி அதானியின் பையை மட்டும் நிரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுதற்கும் பிரதமர் பதிலளிக்கவில்லை. 

வெளிநாடுகளில் இது குறித்த பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதற்கும் அரசு பதில் சொல்லாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்திய ரயில்வேயில் 2030க்குள் முடிவு பெறக்கூடிய 39 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  ஏறக்குறைய 5,000 கிலோமீட்டருக்கான திட்டங்களில் ஒரு திட்டம் கூட தமிழ்நாட்டில் கிடையாது.

அனைவரையும் சமமாக பாவிக்க வேண்டிய மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ஒரு திட்டங்கள் கூட கொடுக்கவில்லை என்றால் இங்கு எப்படி தொழில் துறை வளரும்?

நீண்ட தூர ரயில் பயணங்களில் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனை ரயில்வே கவனத்தில் கொள்ள மறுக்கிறது. தெற்கு ரயில்வே புறக்கணிக்கப்படுகிறது. முன்பதிவில்லா பெட்டிகள் தேவையான அளவு இணைக்கப்படுவதில்லை. இது குறித்து முழு விபரங்களை அளிக்க வேண்டும். 

தமிழ்நாட்டிற்கு புதிய ரயில் திட்டங்களையும், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளையும் உடனடியாக தொடங்க தமிழ்நாடு பாஜக ஏன் போராடக்கூடாது? பாஜகவின் மாநில தலைவர், அகில இந்திய தலைவர் பேசுவதை விட ஆளுநர் மிக அதிகமாக அரசியல் பேசுகிறார்.

இந்த எய்ம்சை கொண்டு வருவதற்கு முயற்சி செய்தால் என்ன? தமிழக மக்கள் என்றைக்கும் அவரை பாராட்டுவார்கள். தமிழ்நாட்டில் தீண்டாமை கொடுமை அதிகமாக இருக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com