ஈரோடு கிழக்கு: பிப்.27-இல் உள்ளூர் விடுமுறை

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் அன்றைய தினம் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் ஈரோடு கிழக்கு தொகுதியின் கீழ் செயல்படும் பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடைத்தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் பிற பகுதிகளில் பணிபுரியும் பட்சத்தில் அவர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com