கோப்புப்படம்
கோப்புப்படம்

பிப்.20ம் தேதி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனை!

சென்னையில் வரும் 20 ஆம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். 
Published on

சென்னையில் வரும் 20 ஆம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். 

அதிமுக அனைத்து மாவட்டங்களில் உள்ள தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அதிமுக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச.ராமச்சந்திரன் தலைமையில், சென்னை, எக்மோர் பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஹோட்டலில் பிப்ரவரி 20 ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

பன்னீர்செல்வம் தரப்பு மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் கலந்து கொள்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com