

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களை இலங்கை கொள்ளையர்கள் தாக்கி, அரிவாளால் வெட்டியதில் காயமடைந்த நாகை மீனவர்கள் 7 பேர் மறுத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாகை நம்பியார் நகரை சேர்ந்தவர்கள் சந்தூரு, மகேஷ், அகாஷ், சிவபாலன், முருகவேல், சூரியா, முருகன் ஆகிய 7 மீனவர்களும், முருகன் என்பவருக்கு சொந்தமான படகில் 15 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இதையும் படிக்க | ஆலங்குளம்: கிணறு வெட்டும் போது வெடி வெடித்ததில் 3 பேர் பலி
புதன்கிழமை இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 3 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 10 பேர் கத்தி, கட்டையுடன் மீன்வர்களை தாக்கியுள்ளனர். இதில், படகு உரிமையாளர் முருகனுக்கு கையில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது.
மீனவர்களிடம் இருந்த திசைகாட்டும் கருவி, வாக்கிடாக்கி போன்றவைகளை பறித்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.