முதல்முறையாக தமிழகம் வந்தார் திரெளபதி முர்மு!

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்தார்.
முதல்முறையாக தமிழகம் வந்தார் திரெளபதி முர்மு!

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்தார்.

தமிழக அரசு சார்பில் ஆர்.என்.ரவி, சுற்றுலாத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் சிங் சிங் கலோன், மாநகர காவல் ஆணையர் நரேந்திர நாயர் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். 

தனி விமானம் மூலம் தில்லியிருந்து புறப்பட்டு மதுரை சர்வதேச விமான நிலையத்துக்கு திரெளபதி முர்மு வந்தடைந்தார். விமான நிலையத்திலிருந்து பலத்த பாதுகாப்புடன் கார் மூலம் சாலை மார்க்கமாக  மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்கிறார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படவுள்ளது.

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை முதல் கோயில், அதைச் சுற்றியுள்ள பகுதிகள் காவல் துறையினர் தங்கள் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வந்துள்ளனர். 

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலைச் சுற்றியுள்ள சித்திரை வீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் நடைபாதைக் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மதிய உணவு உண்ட பிறகு மதுரையிலிருந்து கார் மூலம் விமானம் சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் கோவை சர்வதேச விமான நிலையத்துக்குச் செல்கிறார்.

கோவை ஈஷா மையத்தில் சத்குரு முன்னிலையில் நடைபெறும் சிவராத்திரி விழா, இன்று (பிப். 18) மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இவ்விழா கடந்த 28 ஆண்டுகளாக ஈஷாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இவ்விழா தியானலிங்கத்தில் நடைபெறும் பஞ்ச பூத க்ரியையுடன் தொடங்கும். இதைத் தொடர்ந்து லிங்க பைரவி தேவி மஹா யாத்திரை நடைபெறும். பின்னர், விழா மேடையில் குடியரசுத் தலைவர் மற்றும் சத்குரு அவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com