ஏடிஎம் கொள்ளை: இருவருக்கு மார்ச் 3 வரை நீதிமன்ற காவல்!

ஏடிஎம் கொள்ளை வழக்கில், ஹரியாணாவைச் சேர்ந்த இருவருக்கும் மார்ச் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 
ஏடிஎம் கொள்ளை: இருவருக்கு மார்ச் 3 வரை நீதிமன்ற காவல்!

ஏடிஎம் கொள்ளை வழக்கில், ஹரியாணாவைச் சேர்ந்த இருவருக்கும் மார்ச் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடித்த 2 பேரும் வேலூர் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூா் பகுதிகளில் இயங்கி வந்த 4 ஏடிஎம் மையங்களில் கடந்த 12-ஆம் தேதி அதிகாலை புகுந்த மா்ம கும்பல், பணம் வழங்கும் இயந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சத்தை திருடிச் சென்றது.

இதில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஆந்திரம், கா்நாடகம், ஹரியாணா மாநிலங்களில் தனிப்படை அதிகாரிகள் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், ஏடிஎம் கொள்ளையில் தொடர்புடைய இருவரை நேற்று இரவு காவல் துறையினர் ஹரியாணாவில் கைது செய்தனர். அவர்கள் இருவரையும் காவல் துறையினர் விமானம் மூலம் தமிழகம் அழைத்து வந்தனர்.

இன்று காலை திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்பு இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட நீதிபதி இருவரையும் மார்ச் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com