வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தங்கம் விலை சற்று குறைந்துள்ளது: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. 

News image
Updated On :20 பிப்ரவரி 2023, 5:57 am

DIN


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. 

தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை கண்டுவருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த இரண்டு மாதமாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது.

இந்நிலையில், பிப்ரவரி 20-ம் தேதி காலை நிலவரப்படி இன்றும் சற்று குறைந்துள்ளது. 

அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,280ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.42,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம், வெள்ளியின் விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.71.70 ஆகவும், ஒரு கிலோ ரூ.100 குறைந்து ரூ.71,700 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.