பாவூர்சத்திரம் தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு ஆராதனை!

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் உள்ள தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு ஆராதனை புதன்கிழமை (பிப்.22) நடைபெற்றது.
பாவூர்சத்திரம் தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு ஆராதனை!

பாவூர்சத்திரம்: தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் உள்ள தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு ஆராதனை புதன்கிழமை (பிப்.22) நடைபெற்றது.

கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முதல் நாளான சாம்பல் புதனில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்களது நெற்றியில் சாம்பலால் சிலுவை அடையாளம் பூசி இயேசு கிறிஸ்துவை வழிபடுவார்கள். முந்தைய ஆண்டு குருத்தோலை ஞாயிறு கொண்டாட்டத்தின் போது வழங்கப்படும் குருத்தோலைகளை சேகரித்து, அதனை எரித்து, அதிலிருந்து கிடைக்கும் சாம்பலை இந்த நாளில் நெற்றியில் சிலுவை அடையாளம் பூசுவர். 

இதன்படி தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் புனித அந்தோணியார் தேவாலயத்தில் பங்குத்தந்தை ஜேம்ஸ் அடிகளார் சாம்பல் புதன் சிறப்பு ஆராதனை நடத்தினார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் சபை மக்கள் அனைவருக்கும் சாம்பலால் சிலுவை அடையாளம் பூசினார். இதேபோல் சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயத்தில் சேகர குருவானவர் டேனியல் தனசன் சாம்பல் புதன் சிறப்பு ஆராதனை நடத்தினார். அதிகாலையில் நடைபெற்ற இந்த ஆராதனைகளில் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சாம்பல் புதனில் தொடங்கி, குருத்தோலை ஞாயிறு வரை 40 நாள்கள் தவக்காலம் கடைபிடிக்கப்படும். குருத்தோலை ஞாயிறுக்கு பிறகு புனித வாரம் கடைபிடிக்கப்படும். ஏப்ரல் 9 ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com