மேட்டூர் அணையில் 63.86 லட்சம் மீன் குஞ்சுகள் விடுவிப்பு!

மேட்டூர் அணையில் 63.86 லட்சம் மீன் குஞ்சுகள் விடுவித்து மீன்வளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை
மேட்டூர் அணை
Updated on
1 min read

மேட்டூர்: மேட்டூர் அணையில் 63.86 லட்சம் மீன் குஞ்சுகள் விடுவித்து மீன்வளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர்  அணையில் ஆண்டு முழுவதும் நீர் இருப்பு தக்க வைக்கப்படுவதால் அணையில் மீன் உற்பத்தியும் பெருமளவில் நடைபெறுகிறது. அணையில் கிடைக்கும் மீன்கள், உரிமம் பெற்றுள்ள மீனவர்களால் பிடிக்கப்பட்டு கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

இது தவிர, அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் மூலம் காவிரி நெடுக மீன் வளம் அதிகரித்து கரையோர மாவட்ட மீனவர்களுக்கு வாழ்வாதாரமாக அமைகிறது.

அணையில் மீன் வளத்தை அதிகரிக்கும் பணியில் தமிழ்நாடு அரசு மேட்டூர் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் ஈடுபட்டு வருகிறது.

இந்த அலுவலகம் சார்பில் செயல்பட்டு வரும் மீன்கள் இனப்பெருக்க மையத்தில் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு ஜூலை மாதம் தோறும் தொடங்கி, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை சீரான இடைவெளியில் மீன் குஞ்சுகள் மேட்டூர் அணையில் விடுவிக்கப்படுகின்றன.

மேட்டூர் அணை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 16-ம் தேதி நிரம்பியது. அதன் பின்னர் நீர்மட்டம் சில அடிகள் குறைந்து வந்தபோதிலும் டிசம்பர் மாதம் 7-ம் தேதி, நீர்மட்டம் 120 அடியை எட்டி மீண்டும்மீண்டும் நிரம்பியது. அணையில் தற்போது வரை 100 அடிக்கு மேல் நீர்மட்டம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் தொடங்கி, தற்போது வரை 63.86 லட்சம் மீன் குஞ்சுள் அணையில் விடுவிக்கப்பட்டுள்ளன. மீன் வளத்தை அதிகரிக்க மீன்வளத்துறை சார் ஆய்வாளர் பாலதண்டாயுதம் மற்றும் அதிகாரிகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கிடையே நேற்றும் மீன் குஞ்சுளை அணையில் விடுவித்தனர்.

 மேட்டூர் அணையில் மீன் வளத்தை பெருக்குவதற்காக ஓராண்டில் 76.73 லட்சம் மீன் குஞ்சுகளை அணையில் விடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், கடந்த ஜூலை மாதம் தொடங்கி தற்போது வரை 63.86 லட்சம் மீன் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக கட்லா 6.02 லட்சம், ரோகு 53.18 லட்சம், மீர்கால் லட்சம். 3.88 கெண்டை 78 ஆயிரம் என 63.86 லட்சம் மீன் உள்பட பல வகையான மீன் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

வருகிற ஜூன் மாதத்துக்குள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கின்படி மொத்த மீன்களும் அணையில் விடப்படும். அணையில் போதிய அளவு நீர் இருப்பதால், மீன்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com