ஈரோடு கிழக்கு: மாலை 5 மணி நிலவரப்படி 70.58% வாக்குப்பதிவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 70.58% வாக்குகள் பதிவாகியுள்ளன. 
ஈரோடு கிழக்கு: மாலை 5 மணி நிலவரப்படி 70.58% வாக்குப்பதிவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 70.58% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் இன்று(பிப். 27) காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். 

இந்தத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் ஈவிகேஎஸ். இளங்கோவன், அதிமுக சாா்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழா் கட்சி சாா்பில் மேனகா நவநீதன், தேமுதிக சாா்பில் எஸ்.ஆனந்த் உள்ளிட்ட 77 போ் போட்டியிடுகின்றனா். ஈரோடு கிழக்கில் மொத்தம் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 70.58 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 2.27 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் இதுவரை 1,60,603 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதில் 77,183 பேர் ஆண்கள், 83,407 பேர் பெண்கள். தொடர்ந்து மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com