ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகுந்த ஏகாதசியையொட்டி, திங்கள்கிழமை காலை 6:30 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகுந்த ஏகாதசியையொட்டி, திங்கள்கிழமை காலை 6:30 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் திறக்கப்பட்டவுடன் கோவிந்தா கோபாலா என பக்தர்கள் கோஷங்கள் எழுப்பியபடி சாமி தரிசனம் செய்தபடி சொர்க்க வாசலில் வழியாக வெளியே வந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலை பொறுத்தவரை மார்கழி என்னை காப்பு உற்சவம் மற்றும் பகல் பத்து நிகழ்ச்சிகள் கடந்த 23 ஆம் தேதி பச்சை பரப்புதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது .இதனைத் தொடர்ந்து கடந்த 10 நாள்களாக பகல் பத்து உற்சவம் நடைபெற்றது. அந்த வகையில் ராபத்து நிகழ்ச்சியின் முதல் நாளான திங்கள்கிழமை வைகுண்ட ஏகாதசியையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் காலை ஆறு முப்பது மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதற்காக ஆண்டாள் கோயிலில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சொர்க்கவாசல் திறக்கப்பட்டவுடன் ஆழ்வார்கள் எதிர்கொள்ள பெரிய பெருமாள் முதலாவதாக வந்தார். அதனைத் தொடர்ந்து ஆண்டாள் ரங்க மன்னர் ஆகியோர் மேளதாளங்கள் முழங்க கோவிந்தா கோபால என திரண்டு இருந்த பக்தர்கள் எழுப்பிய கோஷத்துடன் வெளியே வந்தனர்.

அதிகாலை முதலிலேயே திரண்டு இருந்த பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக வந்தனர். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டாளுக்கும் ரங்க மன்னருக்கும் அதிகாலையில் பூஜை நடத்தப்பட்டது. சர்வ அலங்காரத்தில் காட்சியளித்தனர் அதேபோல் பெரிய பெருமாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சர்வ அலங்காரத்தில் காட்சியளித்தனர்.

சொர்க்கவாசல் நிகழ்ச்சியில் தக்கார் ரவிச்சந்திரன் நிர்வாக அதிகாரி முத்துராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தில் ஜீயர் என ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.

சொர்க்கவாசல் திறப்பையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமின்றி விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பதிவான சிவகாசி ராஜபாளையம் அருப்புக்கோட்டை என உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் ஆண்டாள் கோயிலுக்கு திரண்டு வந்திருந்தனர். பக்தர்கள் அதிக அளவு வந்திருந்ததால் காவல் துணைக் கண்காணிப்பாளர் சபரிநாதன் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் கீதா தலைமையில் போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வைகுண்ட ஏகாதசியையொட்டி, ஆண்டாள் கோயில் விழாக்கோலம் பூண்டிருந்தது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com