அருள்மிகு கோட்டை அழகிரி நாதர் திருகோயிலில் சொர்க்க வாசல் திறப்பு: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

சேலத்தில் வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு அருள்மிகு கோட்டை அழகிரி நாதர் திருகோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டதை அடுத்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையின் நின்று  சுவாமி தரிசனம் செய்தனர்.
வைகுந்த ஏகாதசியையொட்டி திங்கள்கிழமை சேலம் கோட்டை அழகிரிநாதர் பெருமாள் கோயிலில் அதிகாலை திறக்கப்பட்ட சொர்க்க வாசல்
வைகுந்த ஏகாதசியையொட்டி திங்கள்கிழமை சேலம் கோட்டை அழகிரிநாதர் பெருமாள் கோயிலில் அதிகாலை திறக்கப்பட்ட சொர்க்க வாசல்

சேலத்தில் வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு அருள்மிகு கோட்டை அழகிரி நாதர் திருகோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டதை அடுத்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையின் நின்று  சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்துகளின் முக்கிய விரதவழிபாட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது வைகுந்த ஏகாதசி, இந்த வைகுந்த ஏகாதசி வைபவம் திங்கள்கிழமை அணைத்து பெருமாள் திருக்கோயில்களிலும் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அனைத்து பெருமாள் திருகோயில்களிலும் வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது

அதே போல அணைத்து ஆலையங்களிலும் இந்த வைபவம் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது, சேலத்தில் உள்ள அணைத்து பெருமாள் திருக்கோவில்களிலும் திங்கள்கிழமை வைகுந்த ஏகாதசி வைபவம் சிறப்பாக நடைபெற்றது. குறிப்பாக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மிகவும் பழமையானதும் வரலாற்று சிறப்பு மிக்க கோயிலுமான அருள்மிகு கோட்டை அழகிரி நாதர் திருக்கோவில். வைகுண்ட ஏகாதசி வைபவம் மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது. 

அதிகாலை ஐந்து மணி அளவில் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு ரத்னகிரீடத்தில் ராஜா அலங்காரத்தில் பெருமாளும் தாயாரும் கோயிலின் உள்பிரகாரத்தில் வளம் வந்து பின்னர் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஆண்டுக்கு ஒருமுறை திறக்கப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பல்லகில் பவனி வந்தார். 

ரத்னகிரீடத்தில் ராஜா அலங்காரத்தில் பெருமாளும் தாயாரும் கோயிலின் உள்பிரகாரத்தில் வளம் வந்தனர்.

இதனைத் தொடர்ந்து பெருமாளும் தாயாரும் திருக்கோயிலை சுற்றி வலம் வந்த பின் பெருமாளுக்கும் தாயருக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வை காண அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பின்னர் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

இது குறித்து சுதர்சனம் பட்டாசாரியார் கூறியதாவது: விரதத்தில் மிக முக்கிய விரதம் வைகுந்த ஏகாதசி இந்த நாளில் விரதம் இருந்தால் சொர்கத்திற்கு செல்வார்கள் என்பது ஐதீகம் எனவும், இந்த நாளில் பெருமாளை தரிசிப்பது குடும்பத்திற்கு மிகவும் சிறந்தது எனவும் தெரிவித்தார். மேலும், இந்த கரோனா பெருந்தொற்றில் இருந்து மக்களை விடுவிக்க இந்த வைகுந்த ஏகாதசி திருநாளில் ஆண்டவனை பிரார்த்திப்போம் எனவும் தெரிவித்தார். 

கோயிலின் உள்பிரகாரத்தில் வளம் வரும் பெருமாளும் தாயாரும்

இதே போல சேலத்தில் உள்ள அணைத்து பெருமாள் திருக்கோயில்களிலும் சொர்க்க வாசல் திறக்கும் வைபவம் மிக விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்து விட்டு சொர்க்க வாசல் வழியாக வந்து மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த ஆண்டு விஐபி தரிசனம் சிறப்பு தரிசனம் என எதுவும் இல்லாமல் ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் மட்டுமே தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.

கோயிலின் உள்பிரகாரத்தில் வளம் வரும் பெருமாளையும்  தாயாரையும் தரிசிக்கும் பக்தர்கள்.

திருக்கோவில் முழுவதும் காவல்துறையினர் பக்தர்களை சமூக இடைவெளியை பின்பற்றி வர வேண்டும் என அறிவுறுத்தி அனுமதித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வைகுண்ட ஏகாதசியையொட்டி திங்கள்கிழமை சேலம் கோட்டை அழகிரிநாதர் பெருமாள் கோயிலில் அதிகாலை திறக்கப்பட்ட சொர்க வாசல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com