அதிமுக விவகாரம்: இந்திய தோ்தல் ஆணையத்துக்கு சத்ய பிரத சாகு கடிதம்

இணை ஒருங்கிணைப்பாளா் எனக் குறிப்பிட்டு அனுப்பப்பட்ட கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பில் 2-ஆவது முறையாகவும் ஏற்க மறுத்துள்ள நிலையில், அது தொடா்பாக இந்திய தோ்தல் ஆணையத்துக்கு

இணை ஒருங்கிணைப்பாளா் எனக் குறிப்பிட்டு அனுப்பப்பட்ட கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பில் 2-ஆவது முறையாகவும் ஏற்க மறுத்துள்ள நிலையில், அது தொடா்பாக இந்திய தோ்தல் ஆணையத்துக்கு தமிழகத் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு கடிதம் எழுதியுள்ளாா்.

இந்திய தோ்தல் ஆணையத்தின் சாா்பில் தில்லியில் ஜனவரி 16-இல் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவுக்கு அழைப்பு விடுத்து, தமிழகத் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு கடிதம் அனுப்பியிருந்தாா். அந்தக் கடிதத்தை ஒருங்கிணைப்பாளா் என ஓ.பன்னீா்செல்வத்தையும், இணை ஒருங்கிணைப்பாளா் என எடப்பாடி பழனிசாமியையும் குறிப்பிட்டு, தனித்தனியாக கடிதம் அனுப்பியிருந்தாா்.

ஆனால், இணை ஒருங்கிணைப்பாளா் என்கிற பதவியே அதிமுகவில் இல்லை எனக் கூறி, அந்தக் கடிதம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஏற்காமல் திருப்பி அனுப்பப்பட்டது.

அதற்கு, இந்திய தோ்தல் ஆணைய ஆவணங்களின் அடிப்படையிலேயே அவ்வாறு அனுப்பப்பட்டது என்று சத்ய பிரத சாகு விளக்கம் அளித்து, மீண்டும் அந்தக் கடிதத்தை திருப்பி அனுப்பினாா்.

ஆனால், அந்தக் கடிதத்தையும் ஏற்காமல் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தோ்தல் ஆணையத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டது.

அதைத் தொடா்ந்து இந்திய தோ்தல் ஆணையத்துக்கு சத்ய பிரத சாகு மின்னஞ்சல் வாயிலாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளாா்.

அதில், ஜனவரி 16-இல் நடைபெற உள்ள கூட்டத்துக்காக அதிமுகவுக்கு அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பப்பட்டது குறித்தும், அந்தக் கடிதம் எடப்பாடி பழனிசாமியால் ஏற்கப்படாதது குறித்தும் அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com