பொங்கல் தொகுப்பு: வீடு வீடாகச் சென்று டோக்கன் விநியோகம் தொடங்கியது

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்களை வீடு வீடாகச் சென்று விநியோகிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
பொங்கல் தொகுப்பு: வீடு வீடாகச் சென்று டோக்கன் விநியோகம் தொடங்கியது
பொங்கல் தொகுப்பு: வீடு வீடாகச் சென்று டோக்கன் விநியோகம் தொடங்கியது

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்களை வீடு வீடாகச் சென்று விநியோகிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் நியாயவிலைக் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன்களை விநியோகித்து வருகிறார்கள்.

இன்று தொடங்கி வரும் 8-ஆம் தேதி வரை டோக்கன்கள் வழங்கப்படும் நிலையில், பொங்கல் தொகுப்பு திட்டம் ஜன. 9-இல் தொடங்கப்படுகிறது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழுநீள கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்பட உள்ளது. 2.19 கோடி குடும்ப அட்டைதாரா்கள் இதன்மூலம் பயன்பெறவுள்ளனா்.

பொங்கல் தொகுப்பை பெறவுள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன்கள் வழங்குதல், தொகுப்புகள் விநியோகம் செய்யப்பட வேண்டிய முறை குறித்து தமிழக அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. 

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தெருவாரியாக உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், நாளொன்றுக்கு 200 முதல் 250 டோக்கன்கள் அளிக்க வேண்டும். இந்த டோக்கன்களில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நாள் மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட வேண்டும். வரும் வெள்ளிக்கிழமை (ஜன. 6) தவிா்த்து மற்ற நாள்களில் டோக்கன்கள் அளிக்கப்படும். குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்களில் யாா் வேண்டுமானாலும் பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை விநியோகம் குறித்த புகாா்களைத் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும். புகாா்களை 1967 மற்றும் 1800-425-5901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com