அமேசானில் ஷூ வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

அமேசான் தளத்தில் ஷூ ஆர்டர் செய்த பயனர் தனக்கு வந்த பார்சலை கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. 
அமேசானில் ஷூ வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

அமேசான் தளத்தில் ஷூ ஆர்டர் செய்த பயனர் தனக்கு வந்த பார்சலை கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. 

சென்னையில் திரைப்பட உதவி இயக்குநராக பணியாற்றி வருபவர் ராம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமேசான் விற்பனை தளத்தில் பேட்மிண்டன் விளையாட்டிற்கான ஷூவை தள்ளுபடி விலையில் ஆர்டர் செய்திருந்தார். ஜிஎஸ்டி வரியுடன் ரூ.1488 மதிப்பிலான அந்த ஷீ புதன்கிழமை அவருக்கு டெலிவரி செய்யப்பட்டது. 

இந்நிலையில் அந்த பார்சலை திறந்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கமாக ஷூ ஆர்டர் செய்தால் ஒரு ஜோடி வழங்கப்படுவது வழக்கம். ஆனால் ராமுக்கோ வலதுபக்க ஷூ மட்டும் பார்சலில் வந்துள்ளது. 

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அமேசான் நிறுவனத்தை தொடர்பு கொண்டு தனக்கு வந்த பார்சல் விவரத்தை தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள அமேசான் நிறுவனம் இதற்கான மாற்று ஷூவை வழங்க முடியாது எனவும், பணத்தை மட்டும் திரும்ப வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்கிறோம் எனவும் பதிலளித்துள்ளனர். 

அமேசானில் ஆர்டர் செய்த ஒரு ஜோடி ஷூவில் ஒரு ஷூவை மட்டுமே பெற்ற சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com