இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

நீண்ட கால நண்பரை இழந்துவிட்டேன்: ரஜினிகாந்த்

நீண்ட கால நண்பரை இழந்துவிட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:39 pm

DIN

நீண்ட கால நண்பரை இழந்துவிட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத் தலைமை நிர்வாகி வி.எம்.சுதாகர் உடல்நலக்குறைவால் இன்று(வெள்ளிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 71.  இவர் நீண்ட நாள்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.  அவரது மறைவுக்கு ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் இரங்கல் தெரிவித்துள்ளது. 

அத்துடன் ரஜினி ரசிகர்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். அஞ்சலிக்குப் பின் செய்தியாளர்களிடம் ரஜினி கூறியதாவது, சுதாகர் எனது நீண்ட கால நண்பர்; நல்ல நண்பரை இழந்துவிட்டேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 

முன்னதாக சுதாகர் மறைவு குறித்து நடிகர் ரஜினிகாந்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.