தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது

தச்சன்குறிச்சியில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது

2023 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் தொடங்கியது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் தச்சன் குறிச்சியில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்று வருகிறது. சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னத்துரை, பி.கே.வைரமுத்து கலந்து கொண்டனர். டிஆர்ஓ செல்வி, ஆர்டிஓ முருகேசன்,  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரிகின்றனர்.

விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர். இதில், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே கே செல்லபாண்டியன் கலந்து கொண்டார்.

முழுமையான மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு காளைகளும் மாடுபிடி வீரர்களும் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவ குழுவினர், தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

ஜல்லிக்கட்டுப் போட்டியில் பிடி படாத காளைகளுக்கும், வெற்றி பெற்ற வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டுப் போட்டியில் 500 காளைகள் மற்றும் 235 வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.

ஐந்து நிமிடங்களாக லேசான சாரல் மழை பெய்து வரும் நிலையில், தொடர்ந்து ஜல்லிக்கட்டு விழா நடைபெறுகிறது.

மாடுபிடிக்க காத்திருக்கும் மாடுபிடி வீரர்கள்.
மாடுபிடிக்க காத்திருக்கும் மாடுபிடி வீரர்கள்.

ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட மாடுபிடி வீரர்கள் 25 பேர் படுகாயம் நான்கு பேர் மேல்சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com