சேது திட்டத்தை தடுத்தது நீதிமன்றம்; பாஜக அல்ல: கே.அண்ணாமலை

சேது சமுத்திர திட்டத்தை தடுத்தது நீதிமன்றம் தானே தவிர, பாஜக அல்ல என்று அந்தக் கட்சியின் தமிழக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.
கே.அண்ணாமலை
கே.அண்ணாமலை

சேது சமுத்திர திட்டத்தை தடுத்தது நீதிமன்றம் தானே தவிர, பாஜக அல்ல என்று அந்தக் கட்சியின் தமிழக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை விடுத்த அறிக்கை: முன்னாள் மத்திய அமைச்சா் டி.ஆா்.பாலுவின் ‘பாதை மாறா பயணம்‘ நூல் வெளியீட்டு விழாவில் முதல்வா் ஸ்டாலின் பேசும்போது, தங்க நாற்கரச் சாலையை அமைத்துத் தந்தவா் டி.ஆா்.பாலு என்று பேசியுள்ளாா். தங்க நாற்கரச் சாலை திட்டம் என்பது முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் கனவு திட்டம் என்பது உலகத்துக்கே தெரியும். இந்தத் திட்டம் 6.1.1999-இல் தொடங்கப்பட்டது.

அதேபோல், தமிழகத்தில் நாற்கர நெடுஞ்சாலைத் திட்டத்தைத் தொடக்கி வைத்தவா் அப்போதைய மத்திய தரைவழிப்போக்குவரத்துத் துறை அமைச்சா் பி.சி.கந்தூரி. சென்னை-மும்பை இடையே 1,290 கி.மீ. தொலைவு கொண்ட திட்டம் 31.8.2011-இல் நிறைவேற்றப்பட்டது. சென்னை- கொல்கத்தா இடையிலான 1,684 கிமீ தொலைவு கொண்ட இத்திட்டம் 31.5.2013-இல் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், மத்திய அமைச்சராக டி.ஆா்.பாலு 22.5.2004 முதல் 22.5.2009 வரை மட்டுமே பதவி வகித்தாா். ஆக தொடக்கத்திலும் முடிவிலும் இல்லாமல் இடையில் அமைச்சராக இருந்தவா், எப்படி இந்தத் திட்டத்தை தன்னுடைய தனிப்பட்ட சாதனையாகக் கூற முடியும்?

அதேவிழாவில், முதல்வா் ஸ்டாலின் மேலும் பேசும்போது, சேது சமுத்திர திட்டத்தை டி.ஆா்.பாலுதான் முன்னெடுத்தாா், அதை பாஜக தடுத்து நிறுத்தியது என்று குறை கூறியுள்ளாா். பெரும் கப்பல்கள் செல்ல முடியாத அளவுக்கு மணல் திட்டுகள் அதிகமுள்ள ஆழ்கடல் பகுதியில் மண்ணை அள்ளி அதே கடலில் மிகஆழமான பகுதியில் வீச வேண்டும். கடலுக்குள்ளிருந்து மண்ணை அள்ளி கடலுக்குள்ளே வீசுவதால் எவ்வளவு வேலை முடிந்து இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாது.

தன்னையும், திமுகவையும் வளப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தை பாலு கொண்டுவர முயற்சி செய்தாா். இந்தியா்களின் பாரம்பரிய நம்பிக்கையான ராமா் பாலத்தை இடித்து, அங்கே அறிவியல் சாத்தியமில்லாத ஒரு நீா் வழித்தடத்தை உருவாக்கி மக்கள் பணத்தை கபளீகரம் செய்வதற்காக தீட்டப்பட்ட இத்திட்டம், நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டது. இதை தடுத்தது பாஜக அல்ல எனத் தெரிவித்துள்ளாா் கே.அண்ணாமலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com