குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம்:  20 பேருக்கு சம்மன்

குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 20 பேருக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 20 பேருக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முத்துக்காடு ஊராட்சியைச் சேர்ந்தது வேங்கைவயல் கிராமத்தில் சுமார் 30 தலித் குடும்பங்களின் குடியிருப்புகள் உள்ளது.

இங்கு வசிக்கும் சிறார்களுக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிறார்களை பரிசோதித்த மருத்துவர்கள் குடிநீரில் கலப்பு இருந்திருக்கலாம் எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து, சந்தேகமடைந்த மக்கள், தங்கள் குடியிருப்புக்குள் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மேல் ஏறி பார்த்துள்ளனர். அதில், மனிதக் கழிவு மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தகவலறிந்து கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் (மார்க்சிஸ்ட்) எம். சின்னதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன், ஊராட்சித் தலைவர் எம். பத்மா ஆகியோர் பார்வையிட்டு காவல்துறையில் புகார் அளித்தனர்.

புதுக்கோட்டை அருகே தலித் குடியிருப்பிலுள்ள குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நேரில் விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில், குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 20 பேருக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இன்று மாலை 5 மணிக்கு திருச்சி சரக டிஐஜி அமைத்த 11 பேர் கொண்ட குழு முன்பு விசாரணைக்கு 20 பேர்  ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com