திருச்சி மாவட்டத்தில் 8.33 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு!    

திருச்சி மாவட்டத்தில் 8 லட்சத்து 33 ஆயிரம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கும் பணி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். 
திருச்சி மாவட்டத்தில் 8.33 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு!    

     
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் 8 லட்சத்து 33 ஆயிரம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கும் பணி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். 

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி வாங்கும் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.1,000 ரொக்கப் பணத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, செங்கரும்பு வினியோகிக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வினைத் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். 

இதனைத் தொடர்ந்து, திருச்சி  மாவட்டத்தில், திருச்சி மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் அருகில் உள்ள நாச்சியார்பாளையம் நியாய விலைக் கடையில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. அபிராமி ஆகியோர் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்கள். 

இந்நிகழ்வில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன், கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் அபிபுல்லா, மண்டல தலைவர் விஜயலட்சுமி கண்ணன்,உதவி ஆணையர் சதீஷ்குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com