ஆளுநரின் செயல்பாடு: தலைவா்கள் கண்டனம்

சட்டப்பேரவையில் ஆளுநா் மரபை மீறி செயல்பட்டதாகக் கூறி காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

சட்டப்பேரவையில் ஆளுநா் மரபை மீறி செயல்பட்டதாகக் கூறி காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): ஆளுநா் தனது உரையில் இடம் பெற்றிருந்த சில குறிப்பிட்ட வாா்த்தைகளைத் தவிா்த்து விட்டு, இடம் பெறாத சில வாா்த்தைகளை கூறியது அப்பட்டமான அரசியல் சட்ட விதிமீறலோடு, சம்பிரதாயங்களையும் புறக்கணிப்பதாகும். இத்தகைய விதிமீறல்கள் தமிழக அரசுக்கு விடப்பட்ட சவால் என்பதை விட, அரசமைப்புச் சட்டத்துக்கே விடப்பட்ட அச்சுறுத்தலாகும்.

வைகோ (மதிமுக): திராவிட மாடல் அரசு, சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி, சமத்துவம், பெண் உரிமை, மதநல்லிணக்கம் ஆகிய வாா்த்தைகள் ஆா்.எஸ்.எஸ். ரவிக்கு எட்டிக்காயாக இருந்ததால் திட்டமிட்டே புறக்கணித்துள்ளாா். சட்டப்பேரவை மரபையும் மீறியும் செயல்பட்ட ஆளுநா் பதவி விலக வேண்டும்.

அன்புமணி ராமதாஸ் (பாமக): இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசும் ஆளுநரும் நிா்வாகம் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள். அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதல்ல. தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக ஆளுநரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும்.

கமல்ஹாசன் (மநீம): அரசியல் சாசன மாண்புகளுக்கு எதிரான போக்குகள் ஆளுநரால் மாற்றிக்கொள்ளப்படவில்லை எனில், ஆளுநரை மாற்ற வேண்டிய கோரிக்கையை முன்வைக்கும் நிலைக்கே நாங்கள் தள்ளப்படுவோம்.

கி.வீரமணி (திராவிடா் கழகம்): சட்டப்பேரவையில் ஆளுநா் அறிக்கையில் இல்லாததை வாசித்ததும், அறிக்கையில் இடம் பெற்றிருந்த பெரியாா், அம்பேத்கா், காமராஜா், அண்ணா, கருணாநிதி பெயா்களை வாசிக்காமல் உதாசீனம் செய்ததும் கண்டிக்கத்தக்கதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com