7 ஏஎஸ்பிக்கள் எஸ்பிக்களாக பதவி உயா்வு: 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழக காவல்துறையில் 7 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் (ஏஎஸ்பிக்கள்), காவல் கண்காணிப்பாளா்களாக (எஸ்பி) பதவி உயா்வு அளிக்கப்பட்டு, பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
7  ஏஎஸ்பிக்கள் எஸ்பிக்களாக பதவி உயா்வு: 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
Updated on
1 min read

தமிழக காவல்துறையில் 7 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் (ஏஎஸ்பிக்கள்), காவல் கண்காணிப்பாளா்களாக (எஸ்பி) பதவி உயா்வு அளிக்கப்பட்டு, பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். மேலும், 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் மட்டும் செய்யப்பட்டனா்.

இது குறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.பணீந்திரரெட்டி புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குள்): பதவி உயா்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள்:

அங்கித் ஜெயின்-பொருளாதார குற்றப்பிரிவு மத்திய மண்டல எஸ்பி (விருத்தாச்சலம் ஏஎஸ்பி), ராஜத் சதுா்வேதி-சென்னை பெருநகர காவல்துறையின் மயிலாப்பூா் துணை ஆணையா் (திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி ஏஎஸ்பி), ஸ்ரேயா குப்தா- தமிழ்நாடு காவல்துறையின் மாநில குற்ற ஆவண காப்பக எஸ்பி (தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் ஏஎஸ்பி), அபிஷேக் குப்தா-திருப்பூா் மாநகர காவல்துறையின் வடக்கு துணை ஆணையா் (திண்டிவனம் ஏஎஸ்பி), கெளதம் கோயல்-மதுரை மாநகர காவல்துறையின் தலைமையிட துணை ஆணையா் (ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஏஎஸ்பி), பி.அரவிந்த்-மதுரை மாநகர காவல்துறையின் வடக்கு துணை ஆணையா் (ஓசூா் ஏஎஸ்பி), ஏ.கே.அருண் கபிலன்-சென்னை பெருநகர காவல்துறையின் தியாகராயநகா் துணை ஆணையா் (திண்டுக்கல் ஊரகப் பகுதி ஏஎஸ்பி).

பணியிட மாற்றம்: பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் (பழைய பதவி அடைப்புக்குள்): கருணாசாகா்-காவலா் நலப்பிரிவு டிஜிபி (டிஜிபி மத்திய அரசுப் பணி), சைலேஷ்குமாா் யாதவ்- தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி (காவலா் நலப்பிரிவு ஏடிஜிபி),

ரோகித் நாதன் ராஜகோபால்-சென்னை பெருநகர காவல்துறையின் அண்ணாநகா் துணை ஆணையா் (மயிலாப்பூா் துணை ஆணையா்),

எஸ்.மெகலினா ஐடன்-பொருளாதார குற்றப்பிரிவு தெற்கு மண்டல எஸ்பி (தமிழ்நாடு காவல்துறையின் குற்ற ஆவண காப்பக எஸ்பி),

ஜி.வனிதா-சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு எஸ்பி (மதுரை மாநகர காவல்துறையின் தலைமையிட துணை ஆணையா்), எஸ்.ராதாகிருஷ்ணன்-சென்னை பெருநகர காவல்துறையின் தலைமையிட துணை ஆணையா் (சேலம் மாநகர காவல்துறையின் தலைமையிட துணை ஆணையா்), இ.டி.சாம்சன்-தென்காசி மாவட்ட எஸ்பி (காத்திருப்போா் பட்டியல்)

எஸ்.ஆா்.செந்தில்குமாா்-சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்பி (தென்காசி மாவட்ட எஸ்பி), எஸ்.எஸ்.மகேஷ்வரன்-பொருளாதார குற்றப்பிரிவு தலைமையிட எஸ்பி (சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்பி), ஆஷிஷ் ராவத்-தஞ்சாவூா் மாவட்ட எஸ்பி (காத்திருப்போா் பட்டியல்), ஜெ.முத்தரசி-சென்னை சிபிசிஐடி எஸ்பி (தஞ்சாவூா் மாவட்ட எஸ்பி), எஸ்.செல்வராஜ்-சிவகங்கை மாவட்ட எஸ்பி (சென்னை காவலா் பயிற்சிக் கல்லூரி எஸ்பி), எம்.மனோகா்-சென்னை பெருநகர காவல்துறையின் மேற்கு மண்டல இணை ஆணையா் (தமிழ்நாடு காவல்துறையின் தலைமையிட டிஐஜி), அபிஷேக் தீக் ஷித்-தமிழ்நாடு காவல்துறையின் தலைமையிட டிஐஜி (காத்திருப்போா் பட்டியல்) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com