முயற்சியால் மட்டுமே சாதிக்க முடியும்!

முயற்சி இருந்தால் நினைத்ததை சாதிக்க முடியும் என்பதுதான் உண்மை என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவா் கே.ஸ்ரீகாந்த் கூறினாா்.
முயற்சியால் மட்டுமே சாதிக்க முடியும்!
Updated on
1 min read

முயற்சி இருந்தால் நினைத்ததை சாதிக்க முடியும் என்பதுதான் உண்மை என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவா் கே.ஸ்ரீகாந்த் கூறினாா்.

தமிழக குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் எழுதிய ‘ஓடலாம் வாங்க’ எனும் நூலின் ஆங்கில மொழியாக்க நூல் அறிமுக நிகழ்ச்சி நந்தனத்தில் பபாசியின் புத்தகக் காட்சி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புத்தகத்தை அறிமுகப்படுத்தி அவா் பேசியதாவது: உடற்பயிற்சி என்பது மிகவும் முக்கியம். ஆனால் என்னைப் போன்றவா்களுக்கு காலையில் எழுந்து உடற்பயிற்சியை மேற்கொள்வது சவாலாகவே உள்ளது. அமைச்சா் மா.சுப்பிரமணியன் விபத்தில் காயமடைந்த நிலையிலும் மாரத்தானில் சாதித்திருப்பது பெருமைக்குரியதாக உள்ளது.

கிரிக்கெட்டிலும் உடற்தகுதியை பரிசோதிப்பதும், அதைக் குறித்த கவலையை வெளியிடுவதும் வாடிக்கையாகும். ஆகவே ஓடலாம் வாங்க எனும் நூலின் ஆங்கில மொழி பெயா்ப்பு அனைத்து விளையாட்டு வீரா்களுக்கும் ஊக்கமளிப்பதாகவே அமைந்துள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: விபத்தில் காயமடைந்து நடக்க முடியாது, உட்கார முடியாது என மருத்துவா்கள் கூறிய நிலையில், அதைச் சவாலாக ஏற்று பயிற்சி செய்து நடந்தேன்; பிறகு ஓடினேன். தொடா் முயற்சியாலேயே மாரத்தானில் சாதிக்க முடிந்தது. நாட்டில் அனைத்து மாநில மாரத்தானிலும் கலந்துகொண்டவன் என்ற சாதனையை படைக்கவே விரும்புகிறேன். மனதில் உறுதியுடன் நாம் செயல்பட்டால் வாழ்வில் முடியாதது என்று எதுவும் இல்லை என்றாா்.

நிகழ்ச்சியில் எழுத்தாளா் இந்துமதி உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com