அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி 5 வீரர்கள் தகுதி நீக்கம்: 35 காளைகள் வெளியேற்றம்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்களில் தற்போது வரை 190 மாடு பிடி வீரர்களுக்கு உடல் தகுதி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி 5 வீரர்கள் தகுதி நீக்கம்: 35 காளைகள் வெளியேற்றம்!


மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்களில் தற்போது வரை 190 மாடு பிடி வீரர்களுக்கு உடல் தகுதி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 4 மாடு பிடி வீரர், உடல் தகுதி இல்லாத ஒருவர் என 5 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். 

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் உயிரோட்டமாகவும், மண் மணத்தோடும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை(ஜன.15) காலை 8 மணியளவில் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

போட்டியில் காளையை அடக்கும் மாடுபிடி வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், பீரோ, கட்டில், தங்க காசு உள்ளிட்ட ஏராளமான பரிசிகள் வழங்கப்பட உள்ளன. 

போட்டியில் வெற்றி பெறும் வீரருக்கு கார் பரிசு மற்றும் பசு மாடும், இரண்டாவது வீரர் மற்றும் காளைக்கு இரு சக்கர வாகனமும் பரிசாக வழங்கப்படுகிறது. 

5 வீரர்கள் தகுதி நீக்கம்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்களில் தற்போது வரை 190 மாடு பிடி வீரர்களுக்கு உடல் தகுதி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 4 மாடு பிடி வீரர், உடல் தகுதி இல்லாத ஒருவர் என 5 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், போலியான முகவரி கொடுத்த இரண்டு பேர் மற்றும் மது அருந்தியதால் ஒருவர் போட்டியில் பங்கேற்காமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.வெளியேற்றப்பட்ட உள்ளார்.

35 காளைகள் வெளியேற்றம் 
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இது வரை 280க்கும் மேற்பட்ட காளைகள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 35க்கும் மேற்பட்ட காளைகள் முறையற்ற ஆவணங்களால் தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது

காளை உரிமையாளர் காயம் 
மதுரை சிந்தாமணியை சேர்ந்த காளை உரிமையாளர் ராம் பிரபு(24) வெற்றி பெற்ற தனது காளைக்கான பரிசுகளை வாங்கிக் கொண்டு தனது காளையை பிடிக்க முயன்றபோது அவரது விலா பகுதியில் காளை பலமாக குத்தியதால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

காயமடைந்தவர்கள்
இரண்டாம் சுற்று முடிவில் மாடுபிடி வீரர் ஒருவரும், மாட்டு உரிமையாளர்கள் 9 பேரும், பார்வையாளர்கள்ளில் 4 பேர் பலத்த காயமும், 6 பேர் சிறு காயமடைந்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக 4 மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com