சேலம் குகை மாரியம்மன் கோயிலில் கத்தி போட்டு நேர்த்திக்கடன்!

சேலம் குகை ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான வீரக்குமாரர்கள் தங்கள் உடலில்  கத்தி போட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர்.
சேலம் குகை மாரியம்மன் கோயிலில் கத்தி போட்டு நேர்த்திக்கடன்!

சேலம் குகை ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான வீரக்குமாரர்கள் தங்கள் உடலில்  கத்தி போட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர்.

சேலம் குகை மாரியம்மன் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஒவ்வொரு தை மாத முதல் நாளில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் ஐம்பதாம் ஆண்டு பொன்விழா இன்று நடைபெற்றது

அதிகாலை முதல் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, அஸ்வகஜ பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி குபேர ஹோமம் ஆகியவை நடத்தப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகம் செழிப்பாக இருக்கவும், குடும்பம் சந்தோஷமாக திகழவும், திருமண வரம் வேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டியும்  பல்வேறு வேண்டுதல்களை அம்மனுக்கு வைக்கும் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் வீரகுமாரர்கள் தங்கள் உடலில் கத்தி போட்டு அம்மனை வரவேற்றனர்.

இந்த கத்திப் போடுதல் என்பது தன்னுடைய உடம்பில் கத்தியால் குத்தி காயங்களை ஏற்படுத்தும்போது, ஆடல், பாடலுடன் மார்பிலும், கையிலும், கத்தியால் காயத்தினை ஏற்படுத்தியவாறு மார்பில் கத்தி போட்டு அம்மனை அழைத்தனர். 

ஆயிரத்துக்கும் மேற்பட்ட கத்தி போடும் வீரக்குமாரர்கள் சேலம் செவ்வாய்பேட்டை கரி மார்கெட் பகுதியில் அம்மனை அழைத்து  உடலில் கத்தி போட்டுக் கொண்டு ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தின் போது சிவன், பெருமாள், அம்மன், ஆஞ்சநேயர் உள்ளிட்ட தெய்வங்களை தத்ரூபமாக வேடம் தரித்து ஆடி, பாடி தெய்வங்கள் ஊர்வலமாக சென்றது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

இந்த அம்மன் திருவிழா வருகின்ற 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மூன்று நாளும் வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் கத்தி போடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது  என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com