திருச்சி திருவெறும்பூரில் ஜல்லிக்கட்டு: 700 காளைகள் பங்கேற்பு

திருச்சி மாவட்டத்தின் இந்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியானது திருச்சி திருவெறும்பூரில் உள்ள சூரியூரில் காலை 8 மணிக்கு தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
திருச்சி திருவெறும்பூரில் ஜல்லிக்கட்டு: 700 காளைகள் பங்கேற்பு

திருச்சி மாவட்டத்தின் இந்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியானது திருச்சி திருவெறும்பூரில் உள்ள சூரியூரில் காலை 8 மணிக்கு தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இந்த போட்டி 2 மணி வரை நடைபெறுகிறது.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர்,  புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 700 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள்  கலந்து கொண்டுள்ளனர்.

முன்னதாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முன்னிலையில்  மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்ற பிறகு,  ஜல்லிக்கட்டுப் போட்டியை  கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை பொறுத்தவரை சுமார் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டில் காயம் அடையும் வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் 30 பேர் அடங்கிய மருத்துவ குழுவினர்  மற்றும் நான்கு ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் தீயணைப்பு  வாகனமும் தயார் நிலையில் உள்ளது.

வெற்றி பெறும் வீரர்களுக்கும், களத்தில் பிடிபடாத காளைகளுக்கும் இருசக்கர வாகனம், தங்க நாணயம், பீரோ, சைக்கிள், எவர்சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com