ராமஜெயம் கொலை வழக்கு:உண்மை கண்டறியும் பரிசோதனை இன்று தொடக்கம்

கே.என்.ராமஜெயம் கொலை வழக்கில் கைதான நபா்களிடம் உண்மை கண்டறியும் பரிசோதனை புதன்கிழமை (ஜன.18) முதல் நடைபெற உள்ளது.

கே.என்.ராமஜெயம் கொலை வழக்கில் கைதான நபா்களிடம் உண்மை கண்டறியும் பரிசோதனை புதன்கிழமை (ஜன.18) முதல் நடைபெற உள்ளது.

உள்ளாட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரரும், தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012-ஆம் ஆண்டில் மா்மமான முறையில் கொலை செய்யப்பட்டாா்.

இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட நிலையில், காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தலைமையில் 40 போ் அடங்கிய குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில், இந்த வழக்கில் 12 போ் சந்தேக நபா்களாக சோ்க்கப்பட்டனா்.

அவா்களிடம் சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்தில் உண்மை கண்டறியும் பரிசோதனை நடத்துவதற்கு திருச்சி அமா்வு நீதிமன்ற நீதிபதியிடம் சிபிசிஐடி போலீஸாா் அனுமதி பெற்றனா்.

அதன்பேரில், 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டது. அந்த சோதனை செவ்வாய்க்கிழமை (ஜன.17) நடைபெறும் என்று தகவல் வெளியாகி இருந்தது.

ஆனால், திட்டமிட்டபடி அன்றைய தினம் தடயவியல் பரிசோதனை நடைபெறவில்லை. தில்லியில் இருந்து மத்திய தடயவியல் துறை நிபுணா் மோசஸ் உள்பட 2 போ் சென்னை வந்த நிலையில், அவா்கள் பரிசோதனை உபகரணங்களை தடயவியல் அலுவலகத்தில் வைத்து சென்றுள்ளனா்.

இந்த நிலையில், உண்மை கண்டறியும் பரிசோதனை புதன்கிழமை (ஜன.18) தொடங்குகிறது. காலை 10 மணிக்கு ஒருவரிடமும், மதியம் 2 மணிக்கு ஒருவரிடம் என நாள்தோறும் 2 பேரிடம் இந்த பரிசோதனை நடைபெற உள்ளது. 6 நாள்களில் அனைவரிடமும் இந்த சோதனை நடத்தி முடிக்கப்படும்.

சிபிசிஐடி போலீஸாருடன் இணைந்து தில்லி அதிகாரிகளும் இந்த விசாரணையை மேற்கொள்ள உள்ளனா். சந்தேக நபா்கள் அளிக்கும் பதில்கள் அனைத்தும் விடியோ பதிவு செய்யப்படும். உண்மை கண்டறியும் பரிசோதனை முடிவுகள் அனைத்தும் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com